“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

பழ.நெடுமாறன்

“தடை என்பதைத் தாண்டி, உங்கள் நூல்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதுவரைக்கும் இந்தியாவில் எந்த நீதிமன்றமும் / நீதிபதியும் ஒரு புத்தகத்தை அழிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததில்லை. ஏராளமான நூல்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சியிலும் சுதந்திர நாட்டிலும் தடைவிதிக்கப்
பட்டுள்ளது. ஆனால், ஒரு நூலை அடியோடு அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்தையும் எழுத்துச் சுதந்திரத்தையும் அழிப்பதற்குச் சமமானதாகும். எந்த எழுத்தானாக இருந்தாலும், அவனுடைய படைப்பு என்பது மக்களுக்கானது. மக்களுக்குத் தன் படைப்பு போய்ச் சேர வேண்டும் என்பதைத்தான் ஓர் எழுத்தாளன் விரும்புவான். எழுத்தாளனின் படைப்பை அழிக்கும் நிலை எங்கும் யாருக்கும் இனி நேரக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick