“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”

மனுஷ்ய புத்திரன்

“நீங்கள் எழுதிய ‘தேவி’ கவிதைக்காக அடிப்படைவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பையும் வசைகளையும் பெற்றீர்கள். அந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

“அது ஒரு குப்பையான தருணம். நினைப்பதற்குக்கூட தகுதியற்ற தருணம். தொடர்ந்து மதவாதம் சார்ந்த உரையாடலைச் சமூகத்தில் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மத அடிப்படைவாதிகள் பொய்யான பல பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக ஊடகங்களையும் சமூக வலைதளங்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முக்கியமான இலக்காவது கலைஞர்களும் எழுத்தாளர்களும். அவர்கள் எந்தப் பாதுகாப்புமற்ற மென்இலக்குகள். அவர்கள்மேல் ஒரு கோழைத்தனமான தாக்குதல் தொடர்ந்து ஏவப்படுகிறது. கொலை மிரட்டல்கள் கொலையிலும் முடியலாம் என்பதற்கான சாட்சியங்கள்தான் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கெளரி லங்கேஷ் கொலைகள். கலைஞர்களாகிய நாங்கள் இந்தக் காலகட்டத்தில் உயிர் அச்சமின்றி இந்தத் தீய சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் வரலாற்றின் கட்டளை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick