புரைபோகும் கதவு

வெறிபிடித்தாற்போல் தட்டிக்கொண்டே இருக்கிறான்
கதவிற்கோ பயங்கரமாய்ப் புரைபோகிறது
துணைவியோடு நான் துகில் மறந்து தூங்கும் இந்நேரம்
ஏறக்குறைய இருபது முறையாவது தட்டியிருப்பான்
திறக்கவேயில்லையென்பதால்
கதவின்மேல் நெருப்பு நெருப்பென்று
எழுதிவைக்கத் துவங்கினான்
எரியும் வீட்டிலிருந்து
பாதி இறந்துபோய் வெளியேவந்த நான்
அவனையும் கைப்பிடித்து உள்ளே இழுத்தேன்.
அவனோ
‘அப்படியெனில் இந்நேரம்
உன் மனைவியும் உள்ளே நிர்வாணமாகத்தானே
கிடப்பாள்’ என்று
துள்ளிக்குதித்தபடி உள்ளே போனான்
அதற்குள் நல்லவேளையாக
அவள் முழுதும் எரிந்துவிட்டாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick