புராதன கலயத்தின் மது

சம்யுக்தா மாயா, ஓவியம்: மணிவண்ணன்

ருக்கம் மொட்டுக்கள் மீது
இதழ் பதிக்கிறது வெயில்
பூ வெடிக்கிறது அவன் இடும்
முத்தத்தின் சத்தத்தோடு

கிளைகளுக்கிடையில் மறைந்திருக்கும்
சிறு பறவையென உன் காதல்
சடாரென பறக்கையில் உதிரும்
ஒற்றை சிறகுக்காய் என் காத்திருப்பு

ம் கண்களின் உரையாடல்
சதா ஓர் அகழ்வாராய்ச்சி குறித்து
காமத்தின் கள் ஊறுகிறது
புராதன கலயத்தில்

டைந்திட முடியாத காதலை
ஒரு வசீகர மலரென சூடிக்கொள்கிறேன்
அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை

மூங்கில் அசைவின் காற்றில் அதிரும்
ஒரு சிதாரின் நரம்பு என் தேகம்
உன் புல்லாங்குழல்கள் ஏன் மௌனம்?

லையுச்சி இலந்தை மரத்தினூடே
நுழைந்து செல்லும் மென்காற்று உன் ஸ்பரிசம்
கிளிக்கூட்டம் அமரும் நாணல் புல்லென
தள்ளாடத் துவங்கும் என் மனது

தேவாலயத்தில் மண்டியிட்டு
இறைஞ்சுகிறாள் காதலுக்காக
மெழுகுவத்திகளும் ஒற்றை வயலினும்
மெள்ள கசிகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick