முன்னோர் மொழி - 1 | History Of Thanjavur Saraswathi Mahal Library - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

முன்னோர் மொழி - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

எண்தேர் செய்யும் தச்சன்

ரண்டாம் சரபோஜி மன்னர் (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய ‘சரஸ்வதி மகால் நூலகம்’ தஞ்சாவூரில் இருக்கிறது. அந்நூலகம், சோழ மன்னர்கள் காலத்திலிருந்து இருப்பதாகக் கருதப்பட்டாலும் சரபோஜி மன்னராலேயே விரிவாக்கப்பட்டு நூலக அமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகம் மட்டுமல்ல, உலகத்தின் தொன்மையான நூலகங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதை சரபோஜி மன்னர்  உருவாக்கியது பற்றிய செவி வழிக் கதை ஒன்றை ‘திருக்குறளால் வந்த பயன்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் உ.வே.சாமிநாதையர் பதிவு செய்திருக்கிறார்.