கு.அழகிரிசாமி: தொல்குடிப் பண்பாட்டின் கூட்டுக்குரல் | Biography of Ku.Alagirisamy - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

கு.அழகிரிசாமி: தொல்குடிப் பண்பாட்டின் கூட்டுக்குரல்

கல்யாணராமன் - ஓவியம் : மணிவண்ணன்

ளந்தொடும் சிறுகதைகளை ஒரு மேதையின் தெளிவோடும் கனிவோடும் எழுதியவர் கு.அழகிரிசாமி (1923-1970). உரிய முறையில் தமிழ்ச்சூழலில் தனிக்கவனம் பெற்றார் கு.அழகிரிசாமி என எப்படிக் கூற முடியாதோ, அதேபோல் அவர் கவனிக்கப்படவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், நகுலன், பாவண்ணன், ஜெயமோகன், சு.வேணுகோபால் எனப் பலரும் கு.அழகிரிசாமியை முக்கியமான சிறுகதையாசிரியராகக் கொண்டாடி யுள்ளனர். ஆனால் இங்கு புதுமைப் பித்தனுக்கும் தி.ஜானகிராமனுக்கும் அளிக்கப்படும் நியாயமான முக்கியத்துவம் கு.அழகிரிசாமிக்கும் கிடைத்துள்ளதா என்கிற வினாவுக்குத் திருப்தியான விடையில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை