எழுத்தைச் சுரப்பிக்கும் வாதை | Tribute to Writer Kalai Ilakkiya - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

எழுத்தைச் சுரப்பிக்கும் வாதை

சிறகு என்கிறேன் நான்.
இறகு என்கிறாய் நீ.
வீழ்தலும், பறத்தலும் மயங்கிய
பறவையென
பெண்!

“எழுத்து! எங்கிருந்து எப்படி எனக்குள் வந்தது? இன்றுவரை எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது. நிறைய சிறுவர் மலரும், விகடனும் தவிர வேறு படித்ததில்லை. வாரமலர் பின்னட்டைக் கவிதை தவிர அதற்கென்று துறைகளும் புத்தகங்களும் இருப்பதுகூட அறிந்திருக்கவில்லை. பள்ளித் தோழிகளின் சீண்டலிற்குப் பதில் சொல்லும் விதமாகவே எழுதத் தொடங்கினேன். அது என்னைப் பற்றிக் கொண்டது. எழுத்து எப்போதும் இடைவெளியின்றிக் கொட்டும் மழையாக, புதிய வார்த்தைகளின் மீதான தாகமும் தேடலும் நாத்தொங்க அலையவிட்ட கோடையாகப் பள்ளிப்பருவம் என்னைத் தத்தெடுத்துக்கொண்டது.”

(கலை இலக்கியா – கீற்று 2011)

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் வராக நதிக்கரை, வைரமுத்து, மு.மேத்தா போன்ற பிரபலங்களை மட்டுமல்லாது இன்னும் பல கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்களுள் ஒருவர் கலை இலக்கியா.