ரஹாவா ஹேய்லே | Rahawa Haile is an Eritrean-American writer - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ரஹாவா ஹேய்லே

அனுராதா ஆனந்த்

34 வயதான எரிட்ரியா நாட்டை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்க எழுத்தாளர் ராஹாவா ஹேய்லெ.

2015-ல் ட்விட்டரில் ‘A short story a day’ என்ற செயல்பாட்டைத் தொடங்கி, தினமும் ஒரு சிறுகதை பற்றி (ஊடகங்களால்  கவனிக்கப்படாத சிறுகதையாளர்களையும் அவர்தம் தரமான படைப்புகளையும் நாள் தவறாமல்) ட்வீட் செய்தார். இந்த ட்வீட்களில் சில கட்டுரைகளும் புதினங்களும்கூட இடம்பெற்றன. கறுப்பினப் பெண்கள், பால் புதுமையினர் போன்று சமூகத்தின் விளிம்பில் உள்ள படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தினார். இது பெரிய வகையில் கவனிக்கப்பட்டு, ட்விட்டரில் லட்சக் கணக்கான தொடர்பாளர்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. விளிம்பு நிலை  படைப்பாளர்களின் இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், வாசக, பதிப்பகப் பொதுப்புத்தியின் தலைகளில் ஓங்கித் தட்டிய இந்தச் செயல்பாட்டை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை