காரைக்கால் அம்மைக்கு விண்ணப்பங்கள் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

காரைக்கால் அம்மைக்கு விண்ணப்பங்கள்

பா.அகிலன் - ஓவியம் : மணிவண்ணன்

கேள்விப் பதிகம் - 01

தே
கங்கள் தேகங்கள்மீது விடாய் கொள்கின்றன
திறந்து நுழைந்து
நுழைந்து திறந்து
நீர் மேல் நீரைப் பொழிந்தாறி
தாமரைகள் இலங்கும் நீர் மேடாகின்றன கடல்கள்
மின்னுகின்றன மறைகின்றன மகரந்த மணிகள்

பரஸ்பரம் அனுமதி மறுக்கப்பட்ட உடல்களிற்
பாசி படிந்து நிராசைகள் குடிலிடுகின்றன பெருகிப் பெருகி
மறைந்து மறுத்து
நடித்து ஒறுத்து
தேகங்களின் ஓலமறாமலே
ஒழுக்கச் சேலைகளுடன் பிணவாயடைகின்றன அவை
காரைக்காலம்மை ஏன் பேய் வடிவு கேட்டீர்?
கல்லுடல்களும்
கனிவிலா நாட்களும் சலித்தா?
வலித்தா?
எதிர்த்தா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை