கீதா சுகுமாரன் - கவிதைகள் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

கீதா சுகுமாரன் - கவிதைகள்

ஓவியங்கள் : செந்தில்

ஒரு நாள்

வெ
ண் செர்ரிப் பூக்களின் மெல்லிதழ்கள்
அழுக்கு நிற குமிழ்ப்பசை மிட்டாய் மீது
இறுகிக்கொண்டிருக்கும் பாதையில்
இடது ஓரத்தில் இடறும் சிறு கல்
நடுநிசியில் சிந்தப்பட்ட ரத்தத்தின்
மீதமான கருஞ்சிவப்பை வெளிப்படுத்தும்போது
காயப்பட்டவனின் சுவாசம்
பத்தடி தள்ளிய மருத்துவமனையில்
வன்மத்துடன் சினந்துகொண்டிருக்க
எப்போதோ மகளைத் தொலைத்தவள்
அதே தெருவில் பைத்தியமாகி அலைகையில்
நெடிதுயர்ந்த
கண்ணாடிக் கட்டடங்களில்
மினுங்கும் விளம்பர மின்திரையவிழ்க்கும் பியர் நுரை
எதிர்புறமிருக்கும்
ஏரியின் பனிக்கட்டியுடைத்து
வழிந்துகொண்டிருக்கையில்
அவளும் அவனும்
ஈரமுலரா முத்தங்களை
காலடிகளில் நசுக்கியபடி
பி ரி ந் த ன ர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை