தூக்கம் | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

தூக்கம்

கணேசகுமாரன் - ஓவியங்கள் : மணிவண்ணன்

ரவு 10 மணிக்கு மேல் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 9 மணிக்கு செட்டிநாடு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டான். அப்போது கவனமெல்லாம் பரோட்டாவின் மேல் ஊற்றப்பட்ட சால்னாவில் லேசாய் தென்பட்டுக்கொண்டிருந்த கறி வாசனையில் இருந்தது. அதைத் தவிர்த்து, பரோட்டா சாப்பிடக் காரணமாயிருந்த ஊருக்குச் சென்றுவிட்ட மனைவி, மகன் மீதிருந்தது. இருவரும் இருந்திருந்தால் இந்த பரோட்டா டின்னர் நிகழ்ந்திருக்காது. இவ்வளவுக்கும் இவன்தான் அறிவுரை கூறுவான், பரோட்டா சாப்பிடுவது எத்தனை கெடுதலென்று. ஒரே ஒருநாள் மட்டும் என்று மனைவியும் மகனும் கெஞ்சினாலும் பிடிவாதமாய் மறுத்து விடுவான். அவர்கள் கண்ணுக்கு அப்போது அவன் எப்படித் தெரிவானென்று நினைத்துச் சிரித்துக்கொள்வான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஒரு ரகசிய ஆசையாய் கல்லில் கிடந்து வெந்துகொண்டிருக்கும் அவனுக்கான பரோட்டா. மனைவியும் மகனும் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே அந்த பரோட்டா புரட்டிப்போடப்படும். அது ஓர் அபூர்வ நிகழ்வு. அந்த அபூர்வமென்பது இவனுக்கான பரோட்டா தட்டில் வைப்பதைவிட அரிதாய் நிகழும் ஒன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க