மெய்ப்பொருள் காண் - காய் | Meiporul kaan Sa.Visayalakshmi - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மெய்ப்பொருள் காண் - காய்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ச.விசயலட்சுமி

நிலத்திற்கு அடியில் இருந்துகொண்டு செடி, கொடி, மரம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது வேர். அது பூமிக்கு வெளியே தலைநீட்டும்போது, தண்டாகவும் மரமாகவும் கிளையாகவும் பூவாகவும் பிஞ்சாகவும் கடைசியில் ‘காய்’ என்ற பெயருடன் பழமாகி மீண்டும் விதையாக மாறி, பூமியில் விழுந்து வேர் பிடிக்கிறது.

இதில் ‘காய்’, தான் சேமித்துக் கொணர்ந்த துவர்ப்பு, புளிப்பு, கசப்பு முதலான சுவைகளை மாற்றி, இனிப்புச் சுவையாகப் பழங்களுக்குத் தருவதோடு, தனது நிறத்தையும் மாற அனுமதிக்கிறது. செடி, கொடி, மரங்களில் பழத்திற்கு முந்தைய நிலையில் இருப்பதை ‘காய்’ என்கிறோம்.

பிஞ்சாகவும் பழமாகவும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பது காய். இந்த இடைப்பட்ட ஓர் அபூர்வ நிலையைத்தான் செங்காய் அல்லது ஒதப்பழம் என்று அழைக்கும் வழக்கமுள்ளது. ஆங்கிலத்தில் இதற்குப் பொருத்தமான வார்த்தை இல்லாததால், ‘பழுக்காத பழம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

மகாகவி பாரதி, தன் கவிதை ஒன்றில், பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்.  ‘கனியே’ என்று குழந்தையைச் சுட்டும்போது,  ‘காய்’ எது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க