தேவிபிரசாத் சட்டோபாத்யாயா: இந்தியத் தத்துவ வரலாற்றில் ஒரு கீறல் | Debiprasad Chattopadhyaya: A indian Multifaceted Philosopher - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா: இந்தியத் தத்துவ வரலாற்றில் ஒரு கீறல்

எஸ்.பாலச்சந்திரன்

“பெரும்பான்மையான மக்கள் இன்னும் இருளிலும் அறியாமையிலும் அழுத்தப்படுகிறார்கள் என்றால், தொழில் முறையில் சிந்தனையாளராக இருப்பவரது பணி, இந்த அறியாமை எனும் பேயைத் துணிவோடு எதிர்கொண்டு அழித்தொழிப் பதுதான். இதை எளிதாக நிறைவேற்ற முடியாது என்பது உண்மைதான். ஏனெனில், இந்தப் பேய் ஒரு முகமூடியால் தனது முகத்தை மறைத்துக்கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். மக்களை நம்பவைப்பதற்காக அது அணிந்திருக்கும் ‘புனித முகமூடி’ நம் ஞானிகளின் அறிவால் -சாஸ்திரங்களாலோ அல்லது வேத நூல்களாலோ- ஆக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செயல்பாட்டிற்காகச் சமூகத்தால் ஊதியம் வழங்கப்படுப வர்கள்தாம் அந்த முகமூடியை முதலில் அகற்ற வேண்டும். வேத நூல்களைப் பற்றிக் கவலைப்படாமல், இச்சிந்தனையாளர்தான் சமூக நலனைப் பயிற்றி வளர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இது ஆபத்தான பணி என்பது வெளிப்படை. இச்சிந்தனையாளர், ‘கலகக்காரர்’ என்றும், தேசியப் பண்பாட்டின் பொதுநீரோட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர் என்றும் எளிதில் முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்திலிருந்தே விரட்டப்படக்கூடும். எனினும், (ரூப் கன்வருக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் நேர்ந்த) இந்த அவமானம், இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். எனக்கு மட்டுமல்ல, பதவி மோகத்தாலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வேட்டையினாலும் களங்கமடைந்துவிடாத என் சக பணியாளர் களுக்கும்தான். தத்துவவாதிகள் செய்வதற்கு ஏதுமில்லை என்று இதற்குப் பொருளல்ல. ஆனால், அது நாளைக்கு உரியது. போராட்டமோ இன்றே மேற்கொள்ளப்பட வேண்டும். ‘நாளை என்று ஒரு நாள் வரும்’ என்பதை உறுதிப்படுத்துவது நம் அனைவரின் முன்னாலும் உள்ள பணி.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க