ஆதிக்கனவு நிலத்தை நோக்கித் திரும்புதல் | Ritualistic and Raw: S. Murugaboopathy's Theatre - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

ஆதிக்கனவு நிலத்தை நோக்கித் திரும்புதல்

‘கலை என்பது, உணர்வுபூர்வமாக ஒன்றைப்போலவே செய்வதாகும். அதாவது, மாயஉலகைப் படைப்பதாகும். எனவே, கலைஞன் தனது கலைப்படைப்புக்குத் தேவையான விஷயங்களைப் புலனறிவிலிருந்து பெற்றுக்கொண்டபோதிலும், அவனது சிந்தனை மேலும் உயர்ந்த தளத்தில் இயங்குகிறது. தனது சக மாந்தரைக் கற்பனைகள் நிரம்பிய ஓர் உலகத்திற்கு அழைத்துச் செல்வதுதான் கலைஞனின் செயல்பாடாகும். அங்கே, அவர்கள் தங்கள் உணர்ச்சிப் பெருக்குக்கு ஒரு வடிகால் பெறுவது மட்டுமன்றி, நிதர்சன வாழ்க்கையில் காணப்படும் யதார்த்தத்துடனான போராட்டத்தை எதிர்கொள்வதற்கான புதிய தெம்பையும் பெறுகின்றனர்.’

- ஜார்ஜ் தாம்சன் (மனிதசாரம்)

லைதான், ஒரு சமூகம் காண வேண்டிய கனவை அதற்குக் கையளிக்கிறது. கலைதான், ஒரு சமூகம் பேண வேண்டிய நினைவுகளை அதற்கு மீட்டளிக்கிறது. நினைவுகளும் கனவுகளும்தான் ஒரு சமூகத்தின் இயக்கத்தில், அதன் புதிய நகர்திசையைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. வரலாற்றில், மனிதர்கள் சுதந்திரமான கூட்டுழைப்பிலிருந்தபோது, கலை பொதுவில் பிணைந்திருந்தது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என மனிதன் ஓரிடத்தில் நிலைகொள்ள, உழைப்பில் ஏற்பட்ட உபரியின் விளைவாய் தனிச்சொத்து, அரசு, மதம், வர்க்கப் பிரிவினை ஆகிவற்றின் தோற்றங்களுக்குப் பின்னே கலை, தனி நபருக்குரியதாக மாற்றம்கண்டது. உழைப்பிலிருந்தும் கலையிலிருந்தும் மனிதன் அந்நியமாகிவிட்ட சூழலில்...

இயற்கையை அறியவும் அதைப் பிரதிபலிக்கவும் அதன் பேராற்றலைக் கட்டுப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் மனிதன் முயன்றுகொண்டிருந்த ஆதி காலத்தில், எது கலையாக இருந்ததோ அந்தக் கலையை, அதன் களங்கமற்ற தன்மையை நவீன உடல்கொண்டு சமகாலச் சமூகத்தின் பாடுகளை, வாதைகளை, பாவிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும்தான் ச.முருகபூபதியின் நாடக முயற்சியாக இருக்கிறது. ‘சமூகத்தின் மறுக்கமுடியாத கலாசார உடல்கள், சடங்கில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன’ என்ற நம்பிக்கையுடைவராக இருக்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க