மொழியாலான உலகு | Linguistic world - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மொழியாலான உலகு

ருபதாண்டுக் காலமாக உலகத்தின் பல நாடுகளிலும் உற்சாகமாகத் ‘தாய்மொழி நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும், ஒரு நாட்டில் அதிகாரம் இல்லாத மொழி பேசுகிறவர்கள்கூட குதூகலத்தோடு தாய்மொழி நாளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்களோடு, எழுத்து இல்லாத மொழியைப் பேசுகிறவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். தாய்மொழி நாள் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம், ஒவ்வொரு குடிமகனும்/மகளும் தங்களின் தாய்மொழியில் பேசவேண்டும்; எழுதவும், படிக்கவும் அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அதோடு, தன் தாய்மொழி பேசிய கடைசி ஆளாக தான் இருந்துவிடக் கூடாது என்பதையும் சொல்வதுதான்.

மனிதர்கள், 50,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தாய்மொழியைத் திருத்தமாகப் பேசி வருகிறார்கள். உலகத்தில் 7000  ‘தாய்மொழிகள்’ இருக்கின்றன. மொழி என்பதே ஒலிதான். அதாவது, மனிதர்கள் வாய்வழியாக எழுப்பும் ஒலிதான் மொழியென வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொழி என்றால், ஒலியில் அர்த்தம் பெறுவது. அதாவது, பொருளற்றது வெறும் ஒலி. பொருள்கொண்ட ஒலி, மொழி. எனவேதான் தொல்காப்பியர், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க