வளையில் தப்பிய எலி, இணைய நெடுஞ்சாலையில் பாம்புகளான கதை | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

வளையில் தப்பிய எலி, இணைய நெடுஞ்சாலையில் பாம்புகளான கதை

மிழக அரசு, ‘டிக்-டொக்’ என்கிற சமூகவலைதள மென்பொருளைத் தடை செய்வது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், அபிராமி என்கிற சென்னையைச் சேர்ந்த பெண், பிரியாணிக் கடையின் தொழிலாளி ஒருவருடன் ‘டப்ஸ்மாஷ்’ என்கிற சமூகவலைதள மென்பொருள் வழியாக ஏற்பட்ட தொடர்பால், தனது கணவன் அலுவலகம் போன பின், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பியோடினார். சென்ற மாதத்தில், தன்னிடம் கடன் வாங்கிவிட்டு, தராமல் அமெரிக்கா ஓடிப்போன ஒருவரை, ‘வாட்ஸ்-அப்’ எனப்படும் புலனம் வழியாகப் பெண்போலப் பேசி, வரவழைத்துக் கொன்று போட்டுள்ளார் ஒருவர். இவையெல்லாம் சமூகவலைதளங்களின் எதிர்மறையான விளைவுகள் என்றால், அவற்றில் அறிவுசார்ந்து, கல்விசார்ந்து, நட்புசார்ந்து, மருத்துவ ஆலோசனைகள் பெறுதல் உள்ளிட்ட பல நன்மைகளும் இருக்கவே செய்கின்றன.

‘2021-ல் உலகில் 3.02 பில்லியன் (302 கோடி) மக்கள், சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிபரம். இன்று அலைபேசி என்பது, தொடுதிரையுடன் கேமரா, வீடியோ, இணையம் என ஓர் உதவியாளரைப்போல அனைத்துத் தளங்களிலும் இயங்குவதாக; கணிப்பொறியின் கையடக்கத் தொழில்நுட்பமாக மாறியுள்ளது. தொழில்நுட்பப் புரட்சியின் ஓர் ஆகப்பெரும் சாதனையாக இதைச் சொல்லலாம். அதேநேரம், இது மனித உடலில், உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது. ‘சமூகவலைதளம் பயனுள்ளதா - பயனற்றதா?’ என்ற விவாதத்தைவிட அதன் உடலியல், உளவியல் தாக்கம் ஏற்படுத்தும் சமூக விளைவுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க