முகாம் ஒன்று, குரல்கள் இரண்டு | Behrouz Boochani: Refugee who wrote book using WhatsApp - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

முகாம் ஒன்று, குரல்கள் இரண்டு

சா.தேவதாஸ்

சிறையிலிருந்து எழுதப்பட்ட சுயசரிதங்களையும் பிற ஆவணங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம். நேருவின் சுயசரிதம், பகத்சிங்கின் சிறைக்குறிப்புகள், கிராம்சியின் சிறைக்குறிப்பேடுகள் என. ஆனால், அகதிகள் முகாமில் இருந்தபடி போராடுகிற ஓர் இலக்கியவாதியின் நாவல் ஒன்று சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி, அது அந்நாட்டின் உயரிய விருதையும் (VICTORIAN PREMIER’S LITERARY AWARD) பெற்றுள்ளது. ஆம், அந்த ஆசிரியர் பேரூஸ் பூச்சாணி (Behrouz Boochani), ஈரானின் ‘குர்து’ இனத்தைச் சேர்ந்த கவிஞர், செயற்பாட்டாளர். அகதியாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர, 5 ஆண்டுகளுக்கு முன் வந்தவரை அனுமதிக்காமல், பசிபிக் கடலிலுள்ள பப்புவா நியூ கினியிலுள்ள ‘மானுஸ் ஐலேண்ட்’ எனும் தீவிலுள்ள முகாமில் தங்கவைத்தது ஆஸ்திரேலியா அரசு. இன்றுவரை, அந்நாட்டின் முக்கியமான இலக்கிய விருதினை அவர் பெற்றுவிட்ட பின்னரும், குடியுரிமை அளிக்காமல் தவிக்கவிட்டிருக்கிறது. அவரைப்போலவே இன்னும் 600 பேரை.

600 பேரையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்க இயலாமல், மூன்று வெவ்வேறு தீவுகளுக்கு அவர்களை அனுப்பிட ஆஸ்திரேலியா முற்பட்டபோது, தனது அற்ப சொற்ப உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று கைதிகளாக உள்ள அகதிகளெல்லாம் ஒன்றுபட்டு போராடத் துணிகின்றனர். இருள்கவிந்த பிறகுதான் வெளியிலிருந்து கிடைக்கும் உணவைப் பெற முடியும் என்ற நிலை. வரும் உணவை 600 பேரும் பகிர்ந்துகொள்ள வேண்டும், அவர்களுடன் இருக்கும் ஒன்றிரண்டு நாய்கள் உட்பட.

‘அரசின் நெருக்கடிக்குத் தாள முடியாது என்று பயந்து வெளியேறும் அகதிகள்மீது காழ்ப்புணர்வு கொள்ளல் கூடாது. இதுவரை அவர்கள் அளித்துவந்த ஒத்துழைப்புக்கு நன்றி மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும். அரசு என்னதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டாலும், நம் போராட்டம் வன்முறையில் இருக்கக் கூடாது.’ இப்படியான அடிப்படை நெறியுடன் நான்காண்டுகள் அவர்கள் போராடி வந்த இதிகாசப் பரிமாணமிக்க வாழ்வை, பத்திரிகை யாளர்களின் சாதாரண மொழியில் கூற முடியாது என்று எண்ணி, கவிதையும் உரைநடையுமாக எழுத முற்படுகிறார் பூச்சாணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க