அரசியல் சினிமாக்களும், சினிமாக்களின் அரசியலும் | Politics Based Movies In Tamil Cinema - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

அரசியல் சினிமாக்களும், சினிமாக்களின் அரசியலும்

சுகுணா திவாகர்

பொதுவாக ‘அரசியல் சினிமாக்கள்’ எனப் பேசப்படுபவற்றை, புரிந்துகொள்ளப் படுபவற்றை மூன்றாகப் பிரிக்கலாம். அவை, சமகால அரசியல் நிகழ்வுகளைத் திரைக்கதையாக மாற்றும் சினிமாக்கள்... ‘இட ஒதுக்கீட்டால்தான் திறமை அழிந்துவிட்டது’, ‘பள்ளிகளில் சாதி கேட்பதால்தான் சாதி ஒழியவில்லை’, ‘ஊழல் மட்டுமே ஒரே பிரச்னை’ என்று பொதுப்புத்தியை மய்யமாகக்கொண்டு அமைந்த சினிமாக்கள்... கம்யூனிசம், திராவிடம், தமிழ்த்தேசியம், தலித்தியம், பெண்ணியம் எனக் குறிப்பிட்ட அரசியல் கருத்தியலை அடிப்படையாகக்கொண்ட சினிமாக்கள்.

நடப்பு அரசியல் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு படங்களை இயக்கிய வெற்றிகரமான இயக்குநர் என்று ஆர்.கே.செல்வமணியைச் சொல்லலாம்.  ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’,  ‘குற்றப்பத்திரிகை’ எனப் பிரபலமான அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படங்கள் கருத்தியல் சார்ந்த படங்கள் அல்ல.

பொதுப்புத்தியை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்குச் சரியான எடுத்துக்காட்டு, ஷங்கர். தூய்மைவாதப் பிராமணியமும் தேசப்பற்று என்ற பெயரில் இந்துத்துவமும் இவர் படங்களின் அடிப்படை. ‘ஜென்டில்மேன்’ முதல் ‘அந்நியன்’ வரை ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்தும் பொதுப்புத்தி அடிப்படை யிலான சினிமாக்களே. இத்தகைய கருத்தியல் மனநிலையைப் பொதுப்புத்தி யிலிருந்து எடுத்து மீண்டும் பொதுப்புத்தியில் ஆதிக்கக் கருத்தியல் மனநிலையை வளர்ப்பதில் இவை பெரிதும் பங்காற்றுகின்றன. மணிரத்னம் ‘ரோஜா’, ‘பம்பாய், ‘உயிரே’, ‘இருவர்’ என்று நேரடியாகவே பிராமணிய, இந்துத்துவச் சார்புப் படங்களை எடுத்ததோடு ஷங்கரைப்போல் பொதுப்புத்தி சார்பில் எடுத்த படம், ‘ஆயுத எழுத்து’. ஊழலற்ற தூய்மைவாதத்தை முன்வைக்கும் பாவனையில் திராவிட அரசியல்வாதியை வில்லனாகச் சித்திரிக்கும் படம் அது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க