தர்ஸ்டனின் தமிழ்முகம் | Ka.Ratnam: Tamil face of Edgar Thurston - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

தர்ஸ்டனின் தமிழ்முகம்

வெ.நீலகண்டன், படங்கள் : தி.விஜய்

க.ரத்னம்... மொழிபெயர்ப்பு, நாவல், சிறுகதை, கவிதை எனத் தமிழின் சகல தளங்களிலும் ஆழங்கால்பட்ட ஆளுமை. சூழலியல், நாட்டார் வழக்காறு சார்ந்தும் நிறைய பங்களிப்பு செய்தவர். சங்க இலக்கிய ஆய்வாளர், விமர்சகர். பெரிதும் கவனிக்கப்படாத அவரின் பங்களிப்புகள் குறித்து வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

பிரிட்டிஷ் மானுடவியல் ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன், தென்னிந்தியச் சாதிகள், பழங்குடிகள் குறித்து எழுதிய ‘Castes and Tribes of Southern India’ நூலின் ஏழு தொகுதிகளையும், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக மொழிபெயர்த்தவர். ரத்னத்தின் ஆகச் சிறந்த பங்களிப்பு இது. மேலும், ஜேம்ஸ் ஜாய்ஸின் புகழ்பெற்ற ‘டப்ளினர்ஸ்’ நாவலை ‘டப்ளின் நகரத்தார்’ என்ற பெயரில் தமிழ்ப்படுத்தியவர். ஆன்டன் செகாவின் சிறுகதைகள், டி.ஆர்.சேஷ ஐயங்காரின் ‘திராவிடரின் இந்தியா’ என ரத்னத்தின் மொழிபெயர்ப்புச் செயல்பாடு தமிழ்ப் படைப்புச் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

எழுபதுகளில் கோவையைக் களமாகக்கொண்டு தீவிரமாக இயங்கிவந்த படைப்பாளிகளில் ரத்னம் முக்கியமானவர். சிறுபத்திரிகைச் சூழலில் அவர் அளித்த பங்களிப்புகளும் செயல்பாடுகளும் கவனத்திற்குரியவை. ‘கனவு மாலை’, ‘கல்லும் மண்ணும்’, ‘நினைவின் நிழல்’ போன்ற ரத்னத்தின் நாவல்களும், ‘பேதை நெஞ்சம்’, ‘காலத்தேரொலி’ போன்ற கவிதை நூல்களும், ‘சிறுகதைச் சாளரம்’, ‘சிறுகதை முன்னோடிகள்’ போன்ற விமர்சன நூல்களும் இளம் படைப்பாளிகள் வாசிக்க வேண்டியவை. மண்ணின் தன்மையும் தட்பவெப்பமும் மனிதனுக்குள் ஊடுருவி, அவன் தனித்தன்மையாக மாறும் வித்தையை, அந்த மண்ணிலேயே புரண்டெழுந்த வார்த்தைகளால் தனக்கேயான மொழியில் புனைவு தடவி, படைப்பாக்குபவர் ரத்னம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க