மனதிற்கு கற்பியுங்கள்; மூளைக்கல்ல | Before Beside Behind Beyond - Art Show - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

மனதிற்கு கற்பியுங்கள்; மூளைக்கல்ல

‘கலை மனிதர்களை மாற்றும். அந்த மனிதர்கள் உலகத்தை மாற்றுவார்கள்’ - ஜான் பட்லர்.

னிதனுக்கும் கலைக்குமான தொடர்புதான் மனிதனைப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றது. வரலாறு நெடுகிலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில், வெகுமக்கள் எழுச்சிகளில் கலையின் பங்களிப்பு தவிர்க்க இயலாதது. காலகட்டங்களுக்கு ஏற்ப சமூகத்தின் நிறத்தைப் பதிவுசெய்வது கலையின் முக்கிய சாராம்சம். வரலாற்றின் பல முகங்கள் ஓவியம், சிற்பம் என்ற கலைவடிவத்தின் வழியாக இன்றுவரை எஞ்சிநிற்கின்றன.

சென்னை பெசன்ட் நகர், ‘ஸ்பேஸஸ்’ அரங்கில் ‘க்ளே பாய்ஸ்’ மற்றும் ‘மெட்ராஸ் ஆர்ட் கலெக்ட்டிவ்’ குழுவினர் இணைந்து நடத்திய ‘Before, Beside, Behind, Beyond’ என்ற தலைப்பிலான கலைக்கண்காட்சி, தற்காலச் சமூகநிலையைக் கலைவழியான விமர்சனமாய் முன்வைக்கும் காட்சிகளாலான உரையாடல் முயற்சியாக இருந்தது.

சமகாலத்தில் நமக்கு முன்னால், பின்னால், அருகில், அப்பால் நிகழும் சமூக நிகழ்வுகளும் அது ஏற்படுத்துகிற அக - புறச் சிக்கல்களும் வெளிப்பாடுகளும்தாம் கண்காட்சியின் பேசுபொருள். ஓவியங்கள், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், துணிகளால், உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட படிம உருவங்கள் என வெவ்வேறான மூலப்பொருள்களில், வடிவங்களில், கலை வகைமைகளில் வெளிப்படுத்தி யிருந்தார்கள். சாதியின் கோரமுகங்களை, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை, சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களை அழுத்தமாகச் சாடியிருந்தனர்.