காந்தியறிதல்... | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

காந்தியறிதல்...

வசுமித்ர, ஓவியங்கள் : ஆதிமூலம்

காந்தி
தனது மேலுடையைக் களையும்போது கவனித்தேன்
கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம்
உடையை மடித்துவைக்கத் திரும்புகையில்
முதுகைக் கவனித்தேன்
குறுவாள் கிழித்த கோட்டின் வரைபடம்
முகம் அதிர்ச்சிக்குத் திரும்பும்போது

காந்தி
புன்னகையோடு
“இந்தியாவில் நான்
வாழ்வது சற்று சிரமமாக இருக்கிறது

யோசித்துப் பார்க்கையில்  
சத்யமேவ ஜெயதே
சாதியமாவே ஜெயதே என்றொலிக்கிறது

நான் என்ன செய்ய முடியும்,
சுடப்படும்போது
ஹேராம்தான் என்னை முடித்துவைக்கும்
இறுதிச் சொல்லாக இருந்தது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க