முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள் | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள்

லர்ந்த நிற டீ-ஷர்ட்களை விரும்பி அணியத் தொடங்கியதிலிருந்து, நான் தனிமையானவாக மாறிவிட்டதாக அம்மா முனகிக்கொள்வாள். பதினேழு வயதில் இவ்வளவு நுண்ணுணர்வும் நிதானமும் அவசியமற்றதென நூலக நண்பர் அலுத்துக் கொள்வார். உண்மையில் பெரிய வெளிச்சம் எதனாலும் நான் மௌனமாக்கப்படவில்லை. என்னுடைய விளையாட்டுத்தனங்களிலும், அவமானங்களிலும் ஒரு புதிய கண் திறந்திருந்தது. செயல்களுக்குப் பின் எஞ்சுகிற வெறுமையை அடிக்கடி உணர்ந்தேன். ‘இது பிராயத்திற்கே உரிய ஒருவித போலி பெரியமனுஷத்தனம்’ என்றார் நண்பர். ஒருவகையில் இது முழுவதும் போலியுமல்ல. இந்த எளிய முகமூடி அளிக்கின்ற புதிய பொறுப்புகள், புதிய நாசூக்குகள், புதிய மரியாதைகள் அனைத்தின்மீதும் காலம் களிம்பூற்றி இறுகச் செய்துவிடும். நீ வெளியேறவே முடியாத சாதாரண ‘சருகுச் சிறை’ என்றார். நான் வழமைபோலச் சாலையை மேய்ந்து கொண்டிருந்தேன்.

குரியனை போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டதாக அம்மா சொன்னாள். அவளுக்கருகே ஜோசபின் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். நான் சிகரெட் வாடையை அடக்கியபடி அமைதியாக அவர்களைக் கடக்கும்பொழுது, ஜோசபினின் கண்கள் புத்தக விளிம்பிலிருந்து மேலேறி, என்னை ரகசியமாய் விசாரித்து விலகியது. நான்காவது நாளாக இரண்டு எறும்புகள் முட்டிக்கொண்டு விலகி முன்னேறவியலாமல் ஸ்தம்பித்திருப்பதைப் போல நானும் அவளும் ஒரு கணத்தின் முன் உறைந்திருந்தோம். இயல்பாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டால், அத்துடன் என் பால்யம் முடிவுக்கு வருகின்றதை அவளின் முன் நான் ஒப்புக்கொள்ள நேரிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க