தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும் | history of tamil nadu leaders Struggle for eelam - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

தமிழகமும் ஈழப் போராட்டமும் அதிர்வுகளும் ஆதரவுகளும் ஆதங்கங்களும்

சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்

ழப்பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்கு மான உறவு என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வநாயகம் பெரியாரைச் சந்தித்தது, அண்ணா காலத்திலேயே ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தி.மு.க. தீர்மானம் போட்டது ஆகிய வரலாற்றுப் பதிவுகள் இருந்தாலும், 80-களுக்குப் பிறகுதான் ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தில் உருவான ஆயுதக்குழுக்கள், 1983-ல் நடந்த ஜூலை இனப்படுகொலைகள் ஆகியவற்றின் விளைவாக, ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தமிழக மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்திராகாந்தி அரசும் பல்வேறு போராளி அமைப்புகளுக்கு ஆதரவு தந்து ஆயுதப் பயிற்சியும் அளித்தது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்து நிதியுதவியும் அளித்தார். தொடக்கக் காலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி,  ‘டெலோ’ ஆதரவாளராக இருந்தார். சபாரத்தினம் கொலை உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அவர் விமர்சித்தாலும், தி.மு.க-வினர் பெரும்பாலும் புலி ஆதரவாளர்களாகவும் இருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க