உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு | srilanka bomb blast - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

ஜமாலன்

லங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், மனித குலத்தின் உச்சபட்ச கொடூரங்களில் ஒன்று.  சர்ச்சுகள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் தாக்கப்படுவதில் உள்ள உள்நோக்கம் குறித்த குழப்பம் முக்கியமானது. எந்தவித எதிர்பார்ப்பும் உள்நோக்கமும் இல்லாமல் சர்ச்சுகளைத் தாக்குதல் என்பதும், இலங்கை அரசுக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதான தோற்றம் எல்லாம் ஏற்படுத்தும் சந்தேகம் முக்கியமானது. தொடர்ந்து ஆறுமாத காலமாக, இந்திய உளவுத்துறையான ரா (RAW) மற்றும் இலங்கை உளவுத்துறை எச்சரித்தும், அரசு இதில் கவனமற்று இருந்துள்ளது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன. முன்பு ஈழத்தமிழ் போராளிகளைத் தனிமைப்படுத்த, இலங்கைப் பேரினவாத அரசே இத்தகைய குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய வரலாறுகள் உண்டு. இலங்கையில் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு மதத்தினரே முக்கியமான மதத்தினர்கள் என்றாலும், பௌத்தர்களே சிங்கள இனமாகவும், மதமாகவும் உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க