அப்போ இருந்து ஆள் மாறாட்டம்தான்

'பிரிக்க முடியாதது என்னவோ?’ லிஸ்ட்டில் 'தமிழ் சினிமாவும் ஆள் மாறாட்டமும்’ கட்டாயம் இடம்பெறும். தமிழ் சினிமாவின் ஆள் மாறாட்டக் கதைகளைக் கொஞ்சம் அலசி ஆராய்வோமா?

'உத்தமபுத்திரன்’. 1958-ல் ரிலீஸான அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். 'நல்ல சிவாஜி’ பார்த்திபனுக்கும் 'கெட்ட சிவாஜி’ விக்கிரமனுக்கும் நடக்கும் மோதல்தான் படம். மலர்புரி நாட்டின் அரசர் எம்.கே.ராதா. அரசியார் கண்ணாம்பாள் கர்ப்பமுற்ற செய்தி கேட்டு மலர்புரி நாடே சந்தோஷத்தில் திளைக்கும், ஒரே ஒருவரைத் தவிர. அது, அரியாசனத்தின் மீது ஆசைகொண்ட கண்ணாம்பாவின் சகோதரர் நம்பியார். கண்ணாம்பாளுக்குப் பிறக்கும் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தன்னிடம் எடுத்து வந்து கொடுக்கும்படி பணிப்பெண்ணை ஏவுவார் நம்பியார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick