சுட்ட படம்

ர்ப்பக்கம் சொல்வாங்க, ‘பிச்சை எடுக்குமாம் பெருமாளு...அதைத் தட்டிப் பறிக்குமாம் அனுமாரு’னு. அப்படித்தான் இருக்கு இந்த வார சுட்ட படம். 1996-ல் ரிலீஸான ‘ப்ரைமல் ஃபியர்’ என்ற ஹாலிவுட் படத்தைச் சுட்டு 2002-ல் ‘தீவாங்கீ’னு அஜய் தேவ்கன் நடிப்பில் ஒரு ஈயடிச்சான் காப்பி சினிமா வந்துச்சு. அதே படத்தை 2003-ல் தமிழ்ல ஷக்தி சிதம்பரம் என்ற டைரக்டர் ‘காதல் கிறுக்கன்’ என்ற சுமாரான படமாகக் கொடுத்து உயிரை எடுத்தார்.

சரி, ஒரிஜினல் ‘ப்ரைமல் ஃபியர்’ மற்றும் ‘தீவாங்கே’ படங்களின் மையக் கதை என்ன?

செகண்ட் ஹீரோவான ஒருவர் படத்தின் கிரிமினல் லாயர். எந்த வழக்கிலும் தோற்றதில்லை. அவரிடம் ஒரு பாடகியை அறிமுகப்படுத்துகிறார் ஓர் இசையமைப்பாளர். மறுநாள் அந்த இசையமைப்பாளர் அவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். கொலை செய்தது யார் என்றால் பாடகியின் சின்ன வயதுத் தோழர். இருவரும் ஒன்றாகவே சின்ன வயதில் வளர்ந்தவர்கள். அந்தக் கொலைகார மனிதர்தான் படத்தின் ஹீரோ மற்றும் ஆன்ட்டி ஹீரோ. கோர்ட்டில், நான் அந்தக் கொலையைச் செய்யவில்லை எனச் சொல்கிறார். அதையேதான் தன் நண்பன் மீது உள்ள நம்பிக்கையால் அந்தப் பாடகியும் சொல்கிறார். தன் நண்பன் நிச்சயம் கொலை செய்திருக்க மாட்டார் என அந்த கிரிமினல் லாயரிடம் சொல்லி தன் நண்பருக்காக வாதாடி மீட்கச் சொல்கிறார். வழக்கை ஒப்புக்கொண்ட லாயர் சிறைக்குச் சென்று பாடகியின் நண்பரைச் சந்திக்கிறார். அவர் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதை வைத்தே வாதிட்டு அந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலை வாங்கித் தருகிறார். ஆனால், ஸ்பிலிட் பெர்சனாலிட்டி குறைபாடு என்பதே பக்காவான நடிப்புதான் என்று கண்டுபிடிக்கிறார். மீண்டும் அந்த வழக்கை ஆரம்பித்து படத்தின் நாயகனை அவர் உள்ளே தள்ளினாரா, தன்னைக் காதலிக்கும் பாடகியை அவரது சைக்கோ நண்பரிடமிருந்து மீட்க முடிந்ததா? என்பதே க்ளைமாக்ஸ்.

இந்தியில் அஜய்தேவ்கன், ஆங்கிலத்தில் எட்வர்ட் நார்டன் நடித்திருந்த ஆன்ட்டி ஹீரோ ரோலில் தமிழ் ‘காதல் கிறுக்கன்’ படத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். அந்த செகண்ட் ஹீரோ பாலிவுட்டின் ‘தீவாங்கி’யில் அக்‌ஷய் கன்னா அசத்தலாக நடித்திருந்தார். தமிழில் சொல்லவும் வேண்டுமா? வினீத் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் செம ஹிட்டாகி ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம் இந்தியில் ஹிட் படமாகி தமிழில் காதல் கிறுக்கனாய் சுமாரான படமாக மாறியதற்குக் காரணம் திரைக்கதை மற்றும் இயக்கம்தான்!

ஒரே ஆறுதல் வடிவேலு-பார்த்திபன் காம்போவின் கககபோ காமெடி. வடிவேலு செம ஸ்கோர் செய்த படம் இது. இன்றும் காமெடி சேனல்களில் இந்தப் படத்தின் காமெடி சீன்களை ரசித்திருப்போம். சாம்பிளுக்கு ஒண்ணு...

‘அந்த கண்டமனூர்காரரு என்னைக் கண்டம் பண்ணிட்டாரு!’

ஞானப்பழம்

(இன்னும் சுடும்..!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!