நாய்களைச் சமாளிப்பது எப்படி?

வேலை பார்த்துட்டு ராத்திரி லேட்நைட் வீட்டுக்குப் போறதெல்லாம் சென்னை வாழ்க்கையில ரொம்பவே சகஜம். அதுவும் மவுன்ட்ரோடுல ஆபீஸ், மடிப்பாக்கத்துல வீடு. டூ வீலரும் இல்லைனா கேட்கவே வேண்டாம். அந்த நேரத்துல ஷேர் ஆட்டோ பிடிச்சு மாறி மாறி வந்து சேர்றது இருக்கே... அய்யய்யோ போதுமடா சாமினுதான் இருக்கும். இதெல்லாத்தையும் விட ஆட்டோவுக்கு காசைக் கொடுத்துட்டு நாம மட்டும் தனி மனுஷனா நடந்து போறப்போ, தெருநாய்ங்க குரைக்கும் பாருங்க... அடிவயிறே கலங்கிடும். அப்படி குரைக்கிற நாய்ங்ககிட்டே இருந்து நாம எப்படித் தப்பிக்கிறதுனா...

நாய்களைப் பொறுத்தவரை ஒருத்தர் குரைக்க ஆரம்பிச்சுட்டார்னா, அதுக்கு அடுத்தவர் ரிலே ரேஸ் மாதிரி குரைக்க ஆரம்பிச்சுடுவார். நாய்களுக்கு உள்ள ஒரு சுபாவத்தைப் புரிஞ்சுக்குங்க. அதுங்களுக்கும் எல்லைங்க உண்டு. ஒருத்தரோட எல்லையைத் தாண்டி இன்னொருத்தர் வர மாட்டார்.

வேஷ்டியையோ, கைலியையோ டப்பா கட்டு கட்டி இருந்தீங்கனா முதலில் அதை அவிழ்த்து தொங்கவிட்டுக்கிட்டு நடங்க. எந்தக் காரணத்தை வெச்சும் ஓடாதீங்க, நடங்க. அப்போதான் நம்ம ஏரியாக்காரர்னு அது புரிஞ்சுக்கும். அதுக்கப்புறம் குரைக்கிறதை நிறுத்திடும்.

தெரு நாய்களைப் பொறுத்த அளவுல முதலில் ஒண்ணைப் புரிஞ்சுக்குங்க. அதுங்க, பெரும்பாலும் அன்புக்காக ஏங்குற டைப். பகல்ல கொஞ்சம் பிஸ்கட், பொறை வாங்கிப்போட்டு பழகிட்டீங்கனா ராத்திரியில போறப்போ உங்களுக்கு ‘ராஜ மரியாதை’ கிடைக்கும்.

எப்பவுமே கலர்நாயை விட கறுப்பு நாய்ங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருங்க. ஏன்னா கறுப்பு நாய்ங்களைப் பார்த்தா, காரணமே  இல்லாம ஒரு பயம் வரும்.

இதெல்லாத்தையும் விட பாதுகாப்பான வழி நம்ம ‘இன்று போய் நாளை வா’ பாக்யராஜ் ஸ்டைல்தான். எப்பவும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கையில வெச்சிக்கங்க.

-எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick