நல்லாச் சொன்னாங்கய்யா டீட்டெய்லு!

‘காதல்ங்கிறது என்னன்னா’ டயலாக் பேசாத ஒரு கேரக்டரையாவது தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா பாஸ்? அந்த சென்டிமென்ட் வசனங்களுக்கு நடுவில் லாலாலா லாலா லாலாலாலா பின்னணி இசையையும் லைட்டா பிச்சுப்போட்டு காதல்னா என்னான்னு நமக்கு க்ளாஸ் எடுப்பாங்க பாருங்க...ஆஸம் ஆஸம்!

‘பூவே உனக்காக’ படத்தில் ‘தோல்வி அடையறதுக்கு காதல் ஒண்ணும் பரீட்சை இல்லைங்க. அது ஒரு ஃபீலிங்’னு விஜய் ஹஸ்கி வாய்ஸில் கபடி ஆடியதை மறக்க முடியுமா பாஸ்?

‘உன்னை நினைத்து’ படத்தில் ‘வேணும்னா ரெக்கார்ட் பண்றதுக்கும் வேணாம்னா அழிக்கிறதுக்கும் காதல் ஒண்ணும் டேப்ரெக்கார்டர் கேசட் இல்லைங்க. அது மனசு! ஒரு தடவை அழிச்சா அழிச்சதுதான். மறுபடியும் ரெக்கார்ட் பண்ணவே முடியாது’னு லைலாவிடம் ஃபீலிங் காட்டுவார் சூர்யா. டிஜிட்டல் யுகத்துல செம காமெடியா இருக்கு கேட்கிறப்போ!

‘மன்மதன்’ படத்தில் ‘எவனாவது அம்மா, அப்பாவுக்காக உயிரை விட்டிருக்கானா? ஆனா காதலுக்காக எத்தனை பேர் விட்டிருக்கான். அதான் சார் லவ்’னு ஆரம்பிச்சு ‘அவளை உள்ளுக்குள்ள ரோஜாப்பூ மாதிரி அழகா வளத்து வெச்சிருந்தேங்க. அதை வேரோட அப்படியே இழுத்துப் புடிங்கிட்டுப் போகும்போது அந்த முள்ளெல்லாம் குத்திக் குத்தி உடம்பெல்லாம் ரத்தம் ரத்தம்’னு பேசும் எஸ்.டி.ஆரை மந்திரா பேடி கட்டிப்பிடிச்சு சமாதானப்படுத்துவது சான்ஸே இல்லை பாஸ்!

‘யாரடி நீ மோகினி’ படத்தில் ‘உங்களுக்கு என்ன... நீங்க பாட்டுக்கு டக்குன்னு ஐ லவ் யூ சொல்லிடுவீங்க. பொம்பளைங்க நாங்க எவ்வளவு யோசிக்கணும் தெரியுமா? நிறைய டைம் வேணும். ஆனா ஒரு வாட்டி டிசைட் பண்ணிட்டோம், சாகுற வரைக்கும் மாற மாட்டோம்’னு நயன்தாராவும் தன் பங்குக்குக் காதலைப் பற்றிச் சொல்லி ஹீரோஸ் வயிற்றில் பாலை வார்த்திருக்காங்க!

‘சூர்ய வம்சம்’ படத்தில் ‘படிப்பு பட்டமெல்லாம் பார்த்து முன்னுரிமை கொடுக்க காதல் ஒண்ணும் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் இல்லைங்க. அது மனசப் பார்த்து வர்ற விஷயம். அப்படிப் பார்த்தா, நீங்க ஆயிரம் பட்டதாரிகளுக்கு சமம். படிச்சவரோடு வாழ்றதை விட மனசுக்குப் புடிச்சவரோடு வாழ்றதுதான் சந்தோஷம்’னு லவ்வைப் பற்றி நல்ல நல்ல பாய்ன்ட்ஸ்களை எடுத்துச் சொல்லி ச.ம.க தலைவரை சம்மதிக்க வைப்பார் தேவயானி!

இன்னும் எவ்ளோ நாளைக்கு....

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick