இனிமே ஆட்டம்தான்!

3-டிலாம் ஓடிப்போச்சு... விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றிதான் இப்போது உலகம் முழுக்கப் பேச்சு. விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையே 360 டிகிரியிலும் உங்களால் பார்க்க முடியும். மொபைல் போன்களில் இந்த வசதி வந்தபோது ‘டெம்பிள் ரன்’ போன்ற மொபைல் வீடியோ கேம்களும் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு மாற்றப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஸோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விர்ச்சுவல் ரியாலிட்டி ப்ளே ஸ்டேஷன்களை அக்டோபர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ப்ளே ஸ்டேஷன் ரசிகர்களை ரொம்பவே குஷியாக்கியுள்ளது. சாதாரண ப்ளே ஸ்டேஷன்களிலேயே கிராஃபிக்ஸ் நிஜமோ என என்னும் அளவிற்கு பட்டையைக் கிளப்பும். விர்ச்சுவல் ரியாலிட்டி என்றால் சொல்லவா வேண்டும் என அக்டோபருக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போதைக்கு சில கேம்களை மட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்திற்கு மாற்றியுள்ளார்களாம். கால்பந்து போன்ற பெரிய விளையாட்டுகளை மாற்றுவதில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த மொத்த ப்ளே ஸ்டேஷனானது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ஜாய் ஸ்டிக் மற்றும் கன்ஸோல் சேர்ந்ததே.

அதனால், அதிக நேரம் ஹெட்செட் அணிந்துகொள்ள அவசியமில்லாத கேம்களை மட்டும் உருவாக்கி வருகிறார்கள். இதன் விலை 400 டாலர்கள் மட்டுமே. ஏதோ, ஒண்ணு மனுஷங்களைக் கிறுக்கய்ங்க ஆக்காம இருந்தா சரி...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick