ஒரு முடிவோடதான் இருக்காங்க!

ல்லைகள் கடந்து பாகிஸ்தான் - இந்தியா யூத்துகள் சிலர் ஜொள்ளு ஊத்துகிறார்கள் காந்தீல் பலோச்சைப் பார்த்து. யார் இவர்? ‘இந்தியாவை டி20 மேட்ச்சில் தோற்கடித்தால் நிர்வாணமாக டான்ஸ் ஆடுவேன்!’ என்று சொன்ன பாகிஸ்தானிய மாடலேதான். அப்படி என்ன மாடல் என மேய்ந்தால் கிடைத்த தகவல்கள்.

ரொம்ப சுமாரான மொக்கையான திராபையான மாடல். கொஞ்சம் கட்டைக்குரலில் பாட்டும் பாடுவார். சரியான மேக்-அப் மோகிதான் இந்த பலோச். எல்லாவற்றையும்விட செம பப்ளிசிட்டி பப்ளிக்குட்டி!

சில நாட்களுக்கு,  ‘மோடி ஜி, உங்க டீ வியாபாரம் எல்லாம் எப்படிப் போகிறது? உங்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானியர்கள் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை நம்புபவர்கள். எங்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை. எங்களைக் கோபப்படுத்திப் பார்க்காதீர்கள். பிறகு நாங்களும் கோபப்பட்டால் உங்களால் தாங்க முடியாது. உங்களை எச்சரிக்கிறேன்’ என்று கிக்கான டிரெஸ்ஸில் வீடியோ ஒன்றை யூ டியூபில் போட்டு பரபரப்பு கிளப்பியவர். மேட்ச்சில் தோற்றுப்போனதற்கு எல்சிடி டி.வி-யைத் தூக்கிப்போட்டு உடைக்கும் மன வலிமை வாய்ந்த பாகிஸ்தானியர்கள் அந்த வீடியோவுக்கு எப்படி ரியாக்ட் செய்யாமல் போவார்கள்? கொண்டாடினார்கள். இந்தியத் தரப்பிலும் பலத்த எதிர்ப்பு வீடியோக்களை பலர் ரெடி செய்து பலோச்சை கலாய்த்தனர். அடுத்து என்ன அதிரடி செய்யலாம் என்று யோசித்தார்.

உலகக் கோப்பையை வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனச் சொன்ன பூனம் பாண்டே ஸ்டைலில் ‘மார்ச் 18-ம் தேதி டி20 மேட்ச்சில் இந்தியாவை பாகிஸ்தான் டீம் தோற்கடித்தால் நாட்டு மக்கள் சார்பாக நிர்வாணமாக நடனமாடி அதை நம் டீமின் கேப்டன் அஃப்ரிடிக்கு சமர்ப்பிப்பேன்!’ என்று பேசி ஒரு வீடியோவை ஷேர் செய்து ஹாட்டாக்கினார்.
 

இளசுகள் பலோச்சின் முகநூல் பக்கத்தில் செமத்தியாய் லைக்ஸ் அண்ட் ஷேர் செய்தார்கள். ஆனால், மேட்ச்சில் பாகிஸ்தான்  தோற்றுப்போனதும் ‘என்ன செய்வாரோ பலோச்?’ என எல்லோரும் காத்திருக்க  வேறுவிதமான வீடியோவை அப்லோட் செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் டீஷர்ட் அணிந்தபடி அழுதுகொண்டே இந்திய அணியையும் பாகிஸ்தான் அணியையும் திட்டித் தீர்த்தார்.  செயற்கையாக இருந்த அந்த வீடியோவைக் கலாய்த்து மீம்ஸில் தெறிக்கவிட்டனர் இந்தியர்கள். கிருஷ்ணபரமாத்மாவாக டோனி அந்தப் பெண்ணுக்கு ஆடை கொடுத்து மானத்தைக் காப்பாற்றினார் என மீம்ஸ் போட்டுத் தாக்கினர். அதோடு விட்டாரா பலோச்? ‘இந்த டான்ஸ் இந்தியர்களுக்கு!’ என இடுப்பை வெட்டி கில்மா டான்ஸை ஆடி அதை வீடியோவாக்கி வெளியிட, மீண்டும் வைரலில் பலோச்!

ஃபத்வா கொடுக்கலாம் என இஸ்லாமிய அமைப்புகள் கூட்டம் போட்டு யோசித்துக்கொண்டிருக்க... விளம்பர வெறியில் அடுத்து என்ன செய்யப்போகிறாரோ என பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் ஜொள்ளுவிட்டபடி அவர் முகநூல் பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்கிறார்கள்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick