ஆளே மாறிட்டாங்க!

ப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனு அதிர்ச்சி கொடுத்த சில பிரபலங்கள்.

நமீதா: 2002-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் சிக்குனு என்ட்ரி கொடுத்தாங்க. அப்பறம் 93 கிலோ குண்டுப் பாப்பாவா மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்குப் போனாங்க, இதனால் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காம டி.வி விளம்பரங்கள், கடை திறப்பு விழான்னு இறங்கி அடிக்க ஆரம்பிச்சாங்க. கடைசியா நமீதா நடிச்சு ரிலீஸானது ‘பெங்கி பிருகாலி’னு ஒரு கன்னடப்படம். அது 2013-ல் வந்துச்சு, இனி நமீதா அவ்ளோதான்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டிருக்கும்போது அதே பழைய நமீதாவா திரும்பி வந்து ஆச்சரியம் கொடுத்தாங்க. 18 கிலோ எடை குறைச்சிருக்காங்களாம்.

பரத்: ‘போக்கிரி’ படத்தில் உப்புமா சாப்பிடும் குண்டுப் பையனா நடிச்சவர் மாஸ்டர் பரத். குழந்தை நட்சத்திரமாக 50 படங்களுக்கு மேலும் டி.வி நிகழ்ச்சியிலும் நடிச்சிருக்கார். சமீபத்தில் ’இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்திருந்த பரத் ஸ்லிம் ஆகியிருந்தார். பரத் இப்போ ஏரோநாட்டிகல் படிச்சுக்கிட்டிருக்கிறாராம்.

எஸ்.பி.பி.சரண்:அப்பா மாதிரியே வெயிட்டான ஆளு. திடீர்னு ஸ்கூல் பையன் மாதிரி வந்து நின்னதைப் பார்த்து பலரும் ஆடிப்போனாங்க. 10 வயசு வரைக்கும் சரண் ஒல்லியாதான் இருந்தாராம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா வெயிட் போட ஆரம்பிச்சுதாம். உடம்பைக் குறைச்சே ஆகணும்னு கராத்தே கிளாஸ், டான்ஸ் கிளாஸ் எல்லாம் போவாராம். ஆனா முழுசா 10 நாளைக்கு மேல போக மாட்டாராம். இந்தத் தடவை விடப்போவதில்லைனு வெறியோடு கிளம்பியவர் மூணு மாசம் தண்ணியும், ஜூஸும் மட்டும் குடிச்சு வயித்தைக் கட்டி வாயைக் கட்டி அவர் குறைச்ச எடை எவ்வளவு தெரியுமா? 30 கிலோ! 

ஆனந்த் அம்பானி: முகேஷ் அம்பானியின் பையன். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆனந்தைத் தெரியாமல் இருக்காது. வடிவேலு சொல்ற மாதிரி ஆளு ரொம்ப பல்க்கா இருப்பார். குறிப்பா மும்பை இந்தியன்ஸ் டீம் விளையாடும்போது டி.வி-யில் இவரை அடிக்கடி காட்டுவாங்க. ஆனந்தின் எடை 140 கிலோ. அதை வெச்சே நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு இவரைக் கலாய்ச்சுத் தள்ளுவாங்க, சமீபத்தில் இவரைப் பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. ஏனென்றால் வையாபுரி உடம்புக்கு மாறியிருக்கார் மனுஷன். அதிரடியா 70 கிலோவைக் கரைச்சு இளைச்சுருக்கார். புதிய கெட்- அப்பில் இருக்கும் இவரின் போட்டோ சோஷியல் மீடியாக்களில் இப்போ டிரெண்டிங்கில் இருக்கு பாஸ். 

நகுல்: இங்கே நகுல் பற்றி சொல்லாட்டி எப்படி பாஸ். ‘பாய்ஸ்’ படத்தில் முள்ளம்பன்றி ஹேர் ஸ்டைல் புஸ்புஸ் கன்னத்தோடு அமுல் பேபி மாதிரி என்ட்ரி கொடுத்தார். அப்பறம் ஆளையே காணோம். எங்கேனு தேடும்போது அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்ப வந்தார். ஆமா இது யார்னு கேட்கிறது மாதிரி வந்தார். இவர்களைப்போல தெலுங்கில் காமெடியன் சுனில், இந்தியில் சோனாக்‌ஷி சின்கானு இன்னும் சில பேர் பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்காங்க!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick