தனுஷ் ஏன் காதலிச்சார் தெரியுமா?

கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள காம்போ தனுஷ்-கௌதம் மேனன் காம்போதான். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ (இந்தப் பேருக்கு ஒரு காரணம் இருக்கு. அதைக் கடைசியா சொல்றேன்) எப்படி இருக்கும்? ஸோ... ஆக்சுவலி இது ஒரு செம்ம கேங்ஸ்டர் கதை.

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்ச தனுஷுக்கு சின்ன வயசில இருந்தே பெரிய கேங்ஸ்டர் ஆகணும்ங்கிறதுதான் ஆசை, கனவு, லட்சியம், ஆம்பிஷன். ஏன்னா அவருடைய அண்ணனுங்க கொக்கி குமாரு, மாரி ரெண்டு பேரும் பெரிய ரெளடிப் பசங்க. ஆனா, அவங்க மாதிரி லோக்கலா இல்லாம ஸ்டைலிஷான கேங்ஸ்டர் ஆகணும்னு முடிவு பண்றார். நிறைய கேங்ஸ்டர் படம் எல்லாம் பார்த்து ஒரு டான் ஆகிறது எப்பிடினு கத்துக்கிட்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் தன் காலேஜ் ஜூனியர் மேகா ஆகாஷைப் பார்க்கிறார். பார்த்ததுமே லவ்.

ஆனா, மேகாகிட்ட லவ் சொல்லப் போறப்போதான் தெரியிது. அவங்க மேல் படிப்புக்காக அமெரிக்கா போறாங்கனு. கேங்ஸ்டர் ஆசையைத் தள்ளிவெச்சிட்டு காதலிக்கறதுக்காக அமெரிக்கா கிளம்பிப் போறார். கையில கிட்டாரோட அமெரிக்கத் தெருக்கள்ல மேகாவைத் தேடி அலையறார். ஒரு வழியா மேகாவைக் கண்டுபிடிச்சு புரபோஸ் பண்ணுறார். ‘நீ கேங்ஸ்டர் ஆகணும்னு சுத்திட்டிருக்க, உன்னை லவ் பண்ண முடியாது, அதுவும் இல்லாம எனக்கு அடுத்த மாசம் கேரளாவுல கல்யாணம், நீ என்னை மறந்திடு’னு சொல்லிட்டு சொந்த ஊருக்கே கிளம்பறாங்க மேகா.

கல்யாணத்துக்கு முன்னால எப்படியாவது கரெக்ட் பண்ணிடணும்னு கிளம்பிப் போறார் தனுஷ். மேகா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல வெளியே நின்னு ஒரு பையன் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு கத்திக்கிட்டுருக்கான். யார்னு பார்த்தா நம்ம கார்த்திக். தனுஷைப் பார்த்த கார்த்திக் ‘விடுங்க ப்ரோ, இந்த ஏரியாவில எல்லாப் பொண்ணுங்களும் இப்படித்தான். அடுத்த மாசம் கேரளாவுல கல்யாணம்னு சொல்லியிருப்பாளே?’னு சொல்ல, ‘ஆமா ப்ரோ உங்களுக்கு எப்படித் தெரியும்’னு கேட்கிறார் தனுஷ். ‘என்கிட்டயும் சொன்னாளே’னு வெறுப்பா சொல்லிட்டு பீப் சாங் பாடிகிட்டே கிளம்புறான் கார்த்திக்.
 

இப்போ வில்லன் ராணா என்ட்ரி. ராணா ஊருக்கே பெரிய டானா இருக்கிறவர். அவருக்கு மேகா மேல ஒரு கண்ணு. தனுஷ் மேகா பின்னால சுத்திகிட்டுருக்கிறதைத் தெரிஞ்சதும், கூப்பிட்டு தூரமா நின்னு முறைச்சுப் பாத்துக்கிட்டே,  மிரட்டுறார். ‘நான் மறந்திடுறேன். ஆனா, உங்க கேங்ஸ்டர் விளையாட்டுல என்னையும் சேர்த்துக்கோங்க’னு கெஞ்சுறார். ‘பார்க்கவே பரிதாபமா இருக்கியேடா, வாடா என் தம்பி’னு சொல்லி தன்னுடைய ரைட் ஹேண்டா தனுஷை சேர்த்துக்கிறார்.

ஊருக்கே டானா இருந்தாலும் ராணாவுக்கு ப்ரெயின் ட்யூமர் வியாதி இருக்கு. அதுக்காக தினமும் மருந்து சாப்பிடுவார். இதைத் தெரிஞ்சுகிட்ட தனுஷ் அவர் மருந்து பாட்டிலை ஒளிச்சு வெச்சுடுறார். ராணா செத்ததும் தனுஷ் கேங் லீடர் ஆகிறார். இப்போ இன்டர்கட்ல ஃப்ளாஷ்பேக், தனுஷ் மேகா பின்னாடி சுத்தினது, ராணா கேங்குல சேர்ந்தது எல்லாமே தனுஷுடைய ப்ளான்தான். ராணாவை மீறி யாரும் அங்கே பெரிய ஆள் ஆக முடியாது. அதனால ராணாவைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ணி ராணாவோட டாவு மேகா பின்னால சுத்தி, அது மூலமா ராணாவை மீட் பண்ணி, அவரைத் தீர்த்துக் கட்டி இப்போ கேங்ஸ்டரா ஆகிட்டார். அப்பிடியே மேகாவையும் கல்யாணம் பண்றதோட படத்தை முடிக்கிறோம்.

அந்தப் பெயர்க்காரணம்...

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘யாரடி நீ மோகினி’க்குப் பிறகு தனுஷ் படத்துடைய பேர் எல்லாம் ரொம்பச் சின்னதாவே இருக்குல்ல. அதனாலதான் இந்த முறை பெரிய பேரா வெச்சுட்டாங்க. அட முறைக்காதீங்க பாஸ்..... ஸ்மைல் ப்ளீஸ்!

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick