நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?

ம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுனு தியேட்டரில் வரும் விளம்பரத்தைப் போல தற்போது மாறியிருக்கும் சில விஷயங்கள்...

ஊரெல்லாம் இருந்த டீக்கடைகள் பெட்டிக்கடைகளைக் காணவில்லை. அவை இருந்த இடத்தில் புதுசு புதுசா பீட்சா கடைகளும் ரீசார்ஜ் கடைகளும் முளைச்சிருக்கு. குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, முறுக்கு எல்லாம் அழிவின் விளிம்பில் இருக்கு பாஸ்.

தேர்தலில் மட்டும் முன்பு ஒட்டு போடுவோம். தற்போது பாட்டுப் போட்டி, நடனப் போட்டினு கண்டதுக்கும் ஓட்டுப்போட வேண்டியதா இருக்கு. ஒரு ஓட்டுக்கு மூன்றில் இருந்து ஐந்து ரூபாய் வரை எஸ்.எம்.எஸ் கட்டணம் பிடிக்கிறாங்க. யாரோ ஜெயிக்க நாம ஏன் பாஸ் கைக்காசைப் போட்டு ஓட்டுப் போடணும்?

பத்து வருஷத்துக்கு முன்னே கல்யாணம்னா பந்தக்கால் நடுறதுல இருந்து மறு வீடு போவது வரை ஒரே ஒரு போட்டோகிராஃபர்தான் விழுந்து விழுந்து போட்டோ எடுப்பார். அவருக்கு அப்போ ஏகப்பட்ட மரியாதையும் கிடைக்கும். இப்போ 360 டிகிரியிலேயும் வளைச்சு வளைச்சு செல்ஃபி எடுத்து உடனே ஃபேஸ்புக்ல போட்டுடறாங்க. போட்டோகிராஃபர் சாபம் உங்களைச் சும்மா விடாது.

முன்பெல்லாம் மொக்கக் கட்சியில் சேர வேண்டும் என்றால்கூட உறுப்பினர் கார்ட், அது இதுன்னு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. இப்போ ‘ஒரே ஒரு மிஸ்டு கால் விட்டா போதும், நாங்களே சேர்த்திடுறோம்’னு சொல்றாங்க. மேக் இன் இந்தியா பாஸ்.

வித்தியாசமான உணவு சாப்பிட ஆசைப்பட்டா முன்பெல்லாம் டி.வி-யைப் பார்த்து சமைப்பாங்க. இப்போ சமையல் மேஜிக்னு சில நிகழ்ச்சிகள் நடக்குது. அதை நம்பி அடுப்புப் பாத்திரத்தோட நடுராத்திரி டி.வி முன்னே உட்கார்ந்தீங்க... பலானதைப் பேசி நெளிய வெச்சிடுவாங்க. பார்த்துக்கிடுங்க.

முன்பெல்லாம் தாடி வெச்சிருக்கிறவங்க லவ் ஃபெய்லியர் இல்லைனா வி.ஐ.பி-யா இருக்கேன்னு ஏதாவது சொல்வாங்க. இப்போ ‘இது நிவின் பாலி ஸ்டைல். மச்சி யூ நோ நிவின் பாலி மலையாளம் ஹீரோ’னு நாம ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரியே ட்ரீட் பண்றாங்க. 

கவர்னர் மாளிகையில் பதவி ஏற்ற காலம் போய், போஸ்டரில் பதவி ஏற்கும் காலம் வந்துவிட்டது. உடனே  ‘அன்புமணி ஆகிய நான்’ போஸ்டர் உங்களுக்கு ஞாபகம் வந்தா, நான் பொறுப்பு இல்லை பாஸ்.

முன்பெல்லாம் பள்ளிக்கூடத்துலதான் சயின்ஸ் குரூப், கெமிஸ்ட்ரி குரூப், மேத்தமேடிக்ஸ் குரூப்புனு இருக்கும். இப்போ வாட்ஸ் அப்ல குரூப் ஆரம்பிச்சு கொலையா கொல்றாங்க. வால் பசங்க குரூப், சரக்கடிக்கும் குரூப்னு ஏகப்பட்டது இருக்கு. ஒரு வாரம் மட்டும்தான் இந்த குரூப்பெல்லாம் ஆரவாரமா இருக்கும். அப்பறம் குட்மார்னிங் மட்டும்தான் வரும்.

முன்பெல்லாம் தேர்தல் வந்தா, எங்களுக்கே ஓட்டுப் போடுங்க மக்களேனு போஸ்டர் அடிப்பாங்க, நோட்டீஸ் கொடுப்பாங்க, மைக் வெச்சுக் கத்துவாங்க, இப்போ ஃபேஸ்புக்ல கூவுறாங்க; வாட்ஸ் அப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்புறாங்க; மீம்ஸ் போடுறாங்க, ஏன் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா டயலாக்கை யூஸ் பண்ற அளவுக்கு அப்டேட்டா இருக்காங்க!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick