தர லோக்கல்!

கிரிக்கெட் விளையாட்டில் நிறைய டெக்னிக்கல் வார்த்தைகள் உள்ளன. அவற்றை நம் ஊர் தெருக்களில் விளையாடும் பசங்க இப்படிதான் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்!

1 ரன் - ஒன்ச்சி

2 ரன்ஸ் - டூச்சி

3 ரன்ஸ்  - த்ரீச்சி

டிஃபென்ஸ் - கட்டையைப் போடுறது

ட்ரைவ் - தட்டி விடுறது

ஸ்லாக் - காட்டு சுத்து

லாஃப்ட் - கொடி ஏத்துறது

புவர் டைமிங் - குருட்டு சுத்து

ஹெலிகாப்டர் ஷாட் - கிண்டி விடுறது

ஸ்கொயர் கட் - வெட்டி விடுறது

லேட் கட் - தொட்டு விடுறது

மிஸ் ஃபீல்ட் - கப்பை விடுறது

கேட்ச் ட்ராப் - ஓட்ட கை

ஈஸி கேட்ச் - சப்பை கேட்ச்

யார்க்கர்  - பந்தை செருகுறது

ஸ்லோ பால் - லட்டு பால்

டெட் பால் - உருட்டி விடுறது

பீமர் - மண்டைக்கு குறி வைக்கிறது

சப்ஸ்டியூட் - உப்புக்கு சப்பாணி

லெஃப்ட் ஹேண்டர்ஸ் - லொட்ட

கேரம் பால் - சொடுக்கு பால்

எல்லாமே செமல்ல...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick