மனிதக் கிழங்கு!

சீனாவில் ஃபல்லோபியா மல்டிஃப்ளோரானு ஒரு செடி இருக்கு. இது பாலிகொனேசியே என்ற தாவர வகையைச் சேர்ந்தது. சரி... அதுக்கு இப்போ என்னான்னு கேட்கிறீங்களா? மேட்டர் இருக்கு பாஸ். இந்தச் செடியை வெளியில் இருந்து பார்க்கும்போது மற்ற செடிகளைப்போல சாதாரணமாகத்தான்  தெரியும். ஆனால் இது மற்ற செடிகளில் இருந்து தனித்து வித்தியாசப்படுவது இதன் வேர்களில் விளையும் அபூர்வமான கிழங்கினால். இந்த ஃபல்லோபியா கிழங்கு கிட்டத்தட்ட மனித வடிவத்தில் இருப்பதுதான் ஆச்சரியம். கை, கால், மூக்கு, கண் என ஒரு மனுஷனுக்கு என்னென்ன இருக்கணுமோ அது அத்தனையும் அந்தந்த இடத்தில் அப்படியே இருக்கு.  தனிக்கிழங்கா மட்டும் இல்லாமல் சில செடிகளில் ஆண், பெண் என ஜோடியாகவும் விளைகிறது.

இப்படி வித்தியாசமா ஒரு விஷயம் கிடைச்சா, அதை எப்படிப் பணமா மாத்தலாம்னு ஒரு குரூப் யோசிக்குமே. அதுவும் சீனாக்காரங்களுக்கு சொல்லவா வேணும்! கிழங்கின் தலைப்பகுதில் இருக்கும் வேர்கள் மனிதத் தலைமுடியைப் போல அடர்த்தியாக இருப்பது இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. ‘இந்தக் கிழங்கை அரைத்துத் தலையில் தடவினால், முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதோடு வழுக்கைத் தலை உள்ளவர்கள் பயன்படுத்தினால் சீக்கிரமே முடி வளரும்’ என்று அமேசானின் அரியவகை மூலிகை ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க பிசினஸ் பிச்சுக்கிட்டுப் போகுது. பேஸ்ட், பவுடரா மட்டும் இல்லாம இதை மாத்திரையாவும் விற்க ஆரம்பிச்சுட்டாங்க.

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick