கடிக்க கடிக்கப் பிடிக்கும்!

கோயோட்டி பீட்டர்சன் யார் தெரியுமா? இவர் முதலையிடமே கடி வாங்கின ஆளு பாஸ். 

அமெரிக்காவில் கோயோட்டி பீட்டர்சன்னு ஒருத்தர் இருக்கார். காடு, மலை, பாலைவனம்னு கண்ட இடத்திலேயும் சுற்றிவருவார். இவரை ஜூனியர் பியர் க்ரில்ஸ்னுகூடச் சொல்லலாம். அந்த அளவுக்குத் திறமையான ஆளு. ஏன் இவருக்கு இவ்வளவு பில்டப்புனு கொடுக்கிறேன்னா பீட்டர், அனிமல்ஸ்கிட்ட கையைக் கொடுத்து கடி வாங்கி அப்போ வரக்கூடிய வலி, கடிக்கிற வேகம், அது மூலமா வரும் பாதிப்பு இது எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணக்கூடியவர். கடிச்சா வலிக்கும்னு தெரிஞ்சே ஒருத்தன் கையைக் கொடுக்கிறான்னா அவனுக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும். பீட்டருக்கு அது எக்கச்சக்கமா இருக்கு. 

ஹார்வெஸ்டர்னு ஒரு கட்டெறும்பு வகை இருக்கு. இது கடிச்சா வலிக்கும். அந்த எறும்புப்புற்று வாயில் ஒரு நிமிஷம் கையை விடுகிறார் பீட்டர். எறும்பு அவர் மேலே ஏறி அது வேலையைக் காட்ட, ஐயோ அம்மானு அவர் மொழியில் அலறுகிறார். எறும்பு கூட்டம் அறுபத்தி மூணு கொடுக்கை அவர் உடம்புல மெடல் மாதிரி குத்தி வெச்சிடுச்சு. இன்னொரு இடத்தில் முள்ளம்பன்றியைப் பிடிச்சு பாசமா அதை தடவிக் கொடுக்க அது பதிலுக்கு முரட்டுத்தனமான முட்களை அவருக்கு கிஃப்ட்டா கொடுத்திட்டுப் போயிடுச்சு. அதே மாதிரி கடுமையான விஷம் உள்ள கருந்தேளைப் பிடிச்சு உள்ளங்கையில் வெச்சு கடிக்கச் சொல்லி சீண்டுறார். அதுக்கு முத்தம் கொடுக்கிறார். அன்னைக்கு அந்த கருந்தேள் நல்ல மூடுல இருந்ததால அது பீட்டரை டச் பண்ணவே இல்லை. 

ஆமைகிட்ட கடி வாங்கினதை இங்கே சொல்லியே ஆகணும். 50 கிலோ எடையில் பெரிய சைஸ் ஆமை தண்ணிக்குள்ளே போறதைப் பார்த்த பீட்டர் பாய்ஞ்சு பிடிச்சுக் கரைக்குக் கொண்டு வருகிறார். இன்னைக்கு இதுகிட்ட கடிவாங்கியே ஆகணும்னு ஆசைப்படுறார். அதோட சைஸ் பார்த்து எதுக்கும் இருக்கட்டுமேனு முதல்ல ஒரு சிக்கன் லெக்பீஸை எடுத்து நீட்டுறார். ஆமை அந்த சிக்கன் பீஸை கவ்வி கிழிச்சு வீசிடுச்சு. உடனே பீட்டர் மெல்லிசா ஒரு கிளவுஸை எடுத்து மாட்டி தன்னுடைய கையை நீட்ட, சிக்கனுக்கு என்ன நடந்துச்சோ அதேதான் பீட்டருக்கும் நடந்துச்சு. என்ன ஒண்ணு அவர் கிளவுஸ் போட்டிருந்ததால காயம் கொஞ்சம் கம்மி. இது எல்லாத்தையும் விட முதலைக்கிட்ட கடி வாங்கினதுதான் ஹைலைட். கை மணிக்கட்டில் சின்னதா ஒரு கேமராவைக் கட்டி வீடியோவை ரெக்கார்ட் பண்ணிக்கிட்டே முதலை வாயில கையை விட பாய்ஞ்சு பிடிச்ச முதலை அவரை விடுறது மாதிரி தெரியலை. ஒருவழியா முதலை மூஞ்சில தண்ணி ஊத்தி பீட்டரைக் காப்பத்தியிருக்காங்க

அது என்ன மாயமோ தெரியலை, பீட்டருக்கு மட்டும் எதுவுமே ஆகிறதில்லை! 

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick