என்ன கருமம்டா இது!

‘காதலும் கடந்து போகும்’ படத்தில் ‘ட்ரங்கன் ப்ரான்’ என்ற வித்தியாசமான மெனுவை விஜய் சேதுபதி சொல்வார். உலகம் முழுவதும் இருக்கும் சில வித்தியாசமான மெனுக்களின் லிஸ்ட் இது...

ஸோர் டோ காக்டெய்ல்: கனடாவில் இருக்கும் டௌன்டவுன் ஹோட்டல் பாரின் சிறப்பம்சமான ஸ்பெஷல் காக்டெய்ல் இது.  இங்கு ஆர்டர் செய்யும் விஸ்கியோடு துண்டிக்கப்பட்ட மனிதக் காலின் கட்டைவிரல் ஒன்றைப் போட்டுப் பருகத் தருவார்கள். அந்தக் கட்டைவிரலைப் பல வருடங்களாக கெடாமல் பாதுகாத்து வருகிறார்கள். 1973-ல் கேப்டன் டிக் ஸ்டீவன்ஸன் என்பவர் மலையேற்றத்தின் போது இந்தத் துண்டிக்கப்பட்ட விரலைக் கண்டுபிடித்திருக்கிறார். அதை ‘மம்மிஃபை’ பண்ணி பல வருடங்களாக விஸ்கிக்குள் போட்டு கல்ப்பாக அடித்து வருகிறார். மனிதக் கட்டைவிரல் என்ற அந்த கிக் மற்றும் த்ரில்லோடு உதட்டில் அந்தக் கட்டைவிரல் உரசும் அந்த அனுபவத்துக்காக வெறித்தனமாக அந்த பாரில் சரக்கடிக்க குவிகிறார்களாம். இன்னும்கூட அந்தக் கடையைப் பற்றித் தகவல் இருக்கு. போதும் பாஸ்!

ஓடோரி டான்: ஜப்பான் மற்றும் கொரியாவில் ஃபேமஸான உணவு இது! நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள கணவாய் மீனை (ஆக்டோபஸ்)ஆப்படியே காரமான சாஸில் உயிரோடு மூழ்கவைத்து அப்படியே அதன் ஒவ்வொரு கைகளும் துள்ளத் துடிக்கும்போதே அதன் மீது கிரேவி ஊற்றி அப்படியே உயிரோடு எடுத்து சாப்பிடுவதுதான் ஓடோரி டான். பயப்பட வேணாம் பாஸ். உங்கள் தட்டுக்கு வரும் சில நிமிடங்களுக்கு முன் அதன் மூளையை தனியாக எடுத்துவிடுவதால் அந்தக் கணவாய் மீனுக்கு யோசிக்கும் திறமையோ உங்களைக் கடித்து வைக்கும் தார்மீகக் கடமையோ இருக்காது. நம்மை ஏன் இவ்வளவு கொலவெறியா சாகடிச்சு சாப்பிடுறான் என்ற ஆழ்ந்த யோசனையோடே அது உங்கள் வயிற்றுக்குள் போய்விடும்!

பேர்ட்ஸ் நெஸ்ட் சூப்: தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படும் ஸ்விஃப்ட் பறவையின் கூட்டில் மரப்பிசின் போல இருக்கும் அதன் எச்சிலை சேகரித்துத் தயாரிக்கப்படும் சூப் இது. சீனாவில் இந்த சூப்புக்கு எக்கச்சக்க டிமாண்ட். 400 வருடங்களாக இந்த சூப்பை சப்புக்கொட்டி குடித்து வருகிறார்கள் சீனர்கள். அவர்களின் ஆரோக்கிய பானம் இதுதான். தோலின் பளபளப்புக்குக் காரணம் இது என சீன மருத்துவக்குறிப்புகள் சொல்வதால் இப்போது உலகம் முழுவதும் இந்த சூப் சுடச்சுடத் தயாரித்து அருந்தப்படுகிறது. இப்போது மலேசியாவில் இந்த டிஷ் இல்லாத ஓட்டல்கள் இல்லை.

கடைசியாகத் தாய்லாந்தில் கிடைக்கும்  வித்தியாசமான சரக்கு அயிட்டம்ஸ் பாஸ். உலகம் முழுவதுமிருந்தும் வருடத்துக்கு பத்து மில்லியன் ‘குடி’மகன்கள் இந்த ‘உவ்வே’ சர‌க்கின் கிக்குக்காகப் பறந்து வருகிறார்கள். அப்படி என்ன ‘உவ்வே’ என்கிறீர்களா? பாம்பு மிதக்கும் விஸ்கி (கோப்ரா ஸ்நேக் விஸ்கி), தேள் மிதக்கும் வோட்கா (ஸ்கார்பியன் வோட்கா), பூரான் ஒயின் (ஜெயிண்ட் சென்டிபேட் ஒயின்), என எல்லாமே பார்த்தாலே பதறவைக்கும்  கலீஜான ரகம். உயிரோடு பிடிக்கப்பட்ட இத்யாதி ஜந்துக்களை அப்படியே சரக்கு பாட்டிலுக்குள் போட்டு ‘சரக்கு சமாதி’ செய்து மூடி சீல் வைத்து மாசக் கணக்கில் ஸ்டோர் பண்ணி வைத்து விடுகிறார்கள். பார்ப்பதற்கு விலங்கியல் லேபிற்காக‌ பாடம் பண்ணப்பட்டதைப் போலவே இருக்கும் இந்த பாட்டில்களை வாங்கி வீக் எண்ட் பார்ட்டிகளில் குடிக்கிறார்கள் அந்நாட்டின் குடிமகன்கள். அந்நாட்டில் இதுதான் பல பேருக்கு குடிசைத் தொழில்! இவ்ளோ பெரிய பாம்பை பக்கத்துல பார்த்திடாத ஃபாரீன்காரங்களுக்கு செம கில்மா ரேட்டை ஃபிக்ஸ் பண்ணி போணி பண்ணுகிறார்கள்.  ஆண்மை பலத்துக்கு நல்லதாம்! அப்புறம் என்ன.. வாலிப வயோதிக அன்பர்களே... ட்ரை பண்ணுங்களேன்!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick