VIKATAN NOW

சுடச்சுட செய்திகள், செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் பகீர் பின்னணி, சீரியஸ் பாதி, ஜாலி மீதி என சேர்ந்து செய்த கலவையான விகடன்.காம் இணையப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் செம கலர்ஃபுல் கலக்கல் விருந்து...

வாசகர்னா கமென்ட்லதான் கருத்து சொல்லணுமா என்ன, ‘வாங்க பாஸ்’ என்று வாசகர்களும் எழுதுவதற்காக ’வாசகர் பக்கம்’ என்ற ஒன்றே இருப்பது செம ஸ்பெஷல்!

விஜய், அஜித் என அபிமானத்துக்குரிய நடிகரின் தகவல்களை அள்ளித் தருவதற்காவே ஒரு பிரத்தியேகப் பக்கம். கிறுகிறுக்க வைக்கும் கிசுகிசு தொடங்கி கிளுகிளுப்பான நடிகைகளின் ஆல்பங்கள் வரை அள்ளுது www.vikatan.com/cinema

அரசியல் தலைவர்களின் பிரசார வண்டிகளில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்குங்கிறதில் ஆரம்பிச்சு நாஞ்சில் சம்பத்தின் இனாவோ எவ்ளோ மைலேஜ் தரும்கிற வரைக்கும் செம ஜாலியான மேட்டர்களைச் சிதறடிச்சிருக்காங்க!

ஸ்விட்சர்லாந்தில் ஓர் ஒவியப்போட்டி. வரைபவரின் ஓவியம் குழந்தைத்தனமாக இருக்கிறது என அத்தனை நடுவர்களும் ரிஜெக்ட் செய்கிறார்கள். வரைந்துகொண்டிருந்தவர், சடாரென ஓவியத்தைத் தலைகீழாகத் திருப்பி பொடியைத் தூவுகிறார். அது ‘வேற லெவல்’ ஓவியம் ஆகிறது. இப்படி பக்காவான பல்சுவை செய்திகள் ஃபாரீன்ல இருந்து பர்மா பஜார் வரைக்கும் அள்ளிப் போட்டிருக்காங்க!

வைகோ எப்படி அட்டக்கத்தி ஆனார், விஜயகாந்த் குரலில் ஏன் கிச்சுக்கிச்சு, அன்புமணி சொல்றதெல்லாம் சாத்தியம்தானா?னு அறிக்கையில் ஆரம்பிச்சு அதிரிபுதிரி அலசல்கள் வரை அதிர வைக்குது!

மக்களிடம் சர்வே எடுப்பது சரி. பேய், பிசாசுகளிடம் சர்வே எடுத்து அதகளமான அட்ராசிட்டியைக் கொடுத்தால்? இப்படியான காமெடி களேபரங்களும் விகடன் ஆன்லைனில்! உண்டு.

புதுப்படங்களை டோரன்டில் டவுன்லோடு செய்து நோகாமல் நொங்கு தின்கிறோம். ஆனால், ‘ரோரன்ட் உலகம் எப்படி இயங்குகிறது?’ என்பதைத் தெரிந்துகொண்டால், கொஞ்சம் பகீர்தான்! பயன்படுத்தும் அதே மொபைலில் விகடன் பக்கத்தைப் புரட்டினால், புரியும்!

செய்தியைப் படிச்சா போதுமா? யூ-டியூபில் பாருங்கள்! பார்த்தால் போதுமா? ‘சவுண்ட் கிளவுடில்’ கேளுங்கள்! ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் என அத்தனை சமூக வலைதளங்களிலும் அசத்துது விகடன்!

அப்புறமென்ன? நம்பி வாங்க, சந்தோஷமாப் படிங்க! இந்த QR CODE-ஐ ஸ்கேன் செஞ்சு பாருங்க, நேரா விகடன் இணையத்துக்கே போயிடுவீங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick