சொல்வதெல்லாம் பொய்!

ன்லைன் வர்த்தகம் மூலம் 1000 சதவிகித அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் மத்திய அரசு, அதற்கு மேக் அவுட் இந்தியா என பெயர் சூட்டி இருக்கிறது!

ஃபேஸ்புக்கில் இருக்கும் கணேஷ் என்பவருக்கு 10,000 ஃபாலோயர்கள் இருப்பதால், அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதாக முடிவு செய்து இருக்கிறது தி.மு.க!

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 15.19 கோடி ரூபாயைத் தமிழகத்தில் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இதில், இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் என்பதால், தமிழக முதல்வர் அதற்கு வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறார்!

வைகோ பேசினால் பலர் தூங்குவதால், அவரை அங்கன்வாடிகளில் மதிய நேர ஆசிரியராக நியமிக்க இருக்கிறார்கள்!

தே.மு.தி.க-வின் சுதீஷ் அவர்கள் வைகோ துணை முதல்வர், விஜயகாந்த் முதல்வர் போன்ற பதவிகளை அறிவித்ததோடு, வீரலட்சுமி அவர்களுக்கு இலக்கியத் துறை அமைச்சர் பதவியையும் வழங்கினார்!

‘ஐ’ படத்திற்காக விக்ரமுக்குத் தேசிய விருது கிடைக்காததால், அடுத்தமுறை கமல் நாட்டை விட்டு செல்லும்போது, தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விக்ரம் ரசிகர்கள் வேண்டுகோள்!

2030-ல் பெட்ரோல் வாகனங்களே இருக்காது என அறிவித்து இருக்கிறார் மத்திய அமைச்சர். அதன் முதல்கட்டமாக, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 400 ரூபாய் நாளை முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறார்!

தான் வாங்கிய கடனில் 4,000 கோடி ரூபாயைத் திருப்பித் தர முடிவு செய்து இருக்கிறார் மல்லையா. லண்டனில் இருக்கும் வங்கி ஒன்றில் இதற்கென லோன் வாங்கி இருக்கிறாராம்!

-சத்யராணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick