சினிமால்!

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு உற்சாகத்தில் இருக்கும் ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘மிருதன்’ படம் பெரிய அளவில் ஓடவில்லையென்றாலும் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் சொன்ன கதை ரொம்பவே பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம். ‘மிருதன்’ போலவே இந்திய சினிமாவில் இதுவரை வெளிவராத ஒரு படமாம். ஹாலிவுட்டில் மட்டுமே உருவாகும் விண்வெளி சம்பந்தப்பட்ட ஒரு படத்தை தமிழ் சினிமாவில் 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறார்களாம். டூயட்டும் அங்கேயே பாடுவாங்களா?

விஜய் சேதுபதியே வேணாம் எனச் சொன்னாலும் பெரிய பட்ஜெட் படங்கள் அவரை விடுவதாக இல்லை. கே.வி.ஆனந்த், செல்வராகவன் படங்களோடு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். ‘நானும் ரெளடிதான்’ டீம் இந்தப் படத்திலும் இணைகிறது. இன்னொரு காதலியாக த்ரிஷா அல்லது எமி ஜாக்ஸனை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் விக்னேஷ் சிவன். நயன்தாரா தான் எப்பவுமே முதல் காதலி. அதானே!

ஒல்லி பெல்லி என்ற பெயருக்கு எப்பவுமே சொந்தக்காரர் இலியானா தான். இந்திக்காகத் தமிழ், தெலுங்கை உதறிவிட்டுப் போனவர் தற்போது இந்தியில் அக்‌ஷய்குமாருடன் ‘ருஸ்டம்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு இயக்குநர்களுக்கு சம்பளம் பற்றிக் கவலையில்லை, நல்ல கதை இருந்தால் சொல்லுங்க என தூதுவிட்டு வருகிறாராம். தூது வருமா, தூது வருமா?

அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘பில்லா’ தான். அந்தப் பாணியில் ஒரு ஸ்டைலிஷ் கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்கக் காத்திருந்தவர் தற்போது சிவா இயக்கும் படத்தில் அது போன்ற ஒரு டானாகத்தான் நடிக்கிறாராம். ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கு சமமான முக்கியத்துவம் இருப்பதால் நயன்தாரா பெயரையே சிபாரிசு செய்துள்ளாராம் தல. கால்ஷீட் இருக்குமா அம்மணிகிட்ட?

ஸ்டன்ட் மாஸ்டர்கள் என்றாலே படங்களில் ஏதாவது ஒரு அடியாளாகத் தலைகாட்டிவிட்டுப் போவார்கள் என்பது எழுதப்படாத விதி. ஆனால், ‘கொம்பன்’ படத்தில் மெயின் வில்லனாகவே நடித்த சூப்பர் சுப்பராயன் தொடர்ந்து ‘திருநாள்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளாராம். இந்நிலையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றனவாம். ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘காட்டு ராஜா’ படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடிக்கிறாராம் மாஸ்டர். சூப்பர் அப்பா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்