ஆஃப் த ரெக்கார்டு!

காட்டன் நடிகர் படத்திலிருந்து கால்ஷீட் இல்லை எனச் சொல்லி விலகிய வாரிசு நடிகை படம் சூப்பர் ஹிட் ஆனதால், ரொம்பவே அப்செட்டாம். காரணம், அதில் நடித்த நாயகிக்குப் பாராட்டுகள் குவிவதுதானாம்!

மூணு நம்பர் நடிகைக்கும் அவரின் கால்ஷீட், சம்பளம், செலவு என எல்லாவற்றையும் கவனித்து வந்த தாய்க்குலத்துக்கும் தகராறாம். இதனால் இருவரும் முன்பு போல பேசிக்கொள்வதில்லையாம். மகளைப் பற்றிப் பேச யாராவது போன் செய்தால், அவளிடமே பேசிக்கொள்ளுங்கள் என போனை கட் செய்கிறாராம்!

நம்பர் ஒன்னாக இருக்கும் நம்பர் நடிகையை சமீபத்தில் வீடு புகுந்து தாக்கி விட்டார்கள், ரோட்டில் அடித்து விட்டார்கள் என யாரோ அவருக்கு வேண்டாதவர்கள் வதந்தியைப் பரப்பி விடுகிறார்களாம். இதனால் என் மார்க்கெட்டை வீழ்த்தவே இப்படில்லாம் பண்றாங்க என நடிகை ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம்!

ஆளும் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதால், காமெடி நடிகர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களில் இப்போது நடிக்க முடியாது, தேர்தல் முடிந்த பிறகு நடித்துத் தருகிறேன் எனக் கூறிவிட்டாராம். இதனால் எப்படி படத்தை முடிப்பது எனத் திணறிப் போய் இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்