பாட்டுக்கு வேட்டு!

‘சூப்பர் சிங்கர்’ புரோகிராம்லாம் பார்த்துட்டு பல கல்பனா அண்ணன்கள் உதயமாயிருக்காங்க. பாட்டு பாடுகிறேங்கிற பெயரில் நம்மை பாடியாக்குற வேலையைப் பார்த்துட்டு இருக்காய்ங்க. அதனால், பாட்டுப் பாடினால் நான் சாம்பிளுக்கு கொடுத்திருப்பது போல கலாய்த்துவிடுங்கள். நமக்கு உயிர் முக்கியம்...

என்னோடு நீ இருந்தால்... உயிரோடு நான் இருப்பேன்... - நாங்க உயிரோட இருக்கணும்டா, தயவு செய்து பாடுறதை நிறுத்துடா!

டங்காமாதிரி ஊதாரி புட்டுகின்னா நீ நாரி... - நெஞ்சுலயே மிதிச்சுபுடுவேன் ஏறி!

சட்டுனு என்னை சாய்ச்சுபுட்டா யாரு அந்தப் புள்ள... - எங்க இருந்துடா வந்த? இப்படி பாட்டுப் பாடியே கொல்ல!

காதல் கண் கட்டுதே... - ஸப்பா... இப்போவே கண்ணைக் கட்டுதே!

ஏன்டி இப்படி எனக்கு உன் மேல கிறுக்கு... - மவனே, வெளிய வாடி உனக்கு இருக்கு!

காரா ஆட்டகாரா காத்திருக்கிறேன்... - ஆட்டோ வரலைனா கால் டாக்ஸிக்கு போன் பண்ணு மங்கி!

சிங்கிள் கிஸ்கே லவ்வா... - அதுக்கு ஏன் இப்படி இழுக்குற ஜவ்வா?

கொஞ்சம் நல்ல மாறி கொஞ்சம் வேற மாறி... - இப்போ எதுக்கு கத்திகிட்டு இருக்கே லூஸு மாதிரி?

அந்த நயன்தாரா வேணாம், அந்த ஆண்ட்ரியாவும் வேணாம்... - நீ பாடவும் வேணாம். ப்ளீஸ்...

தலுக்கா வந்து சிலுக்கா நீ நைட்டியைத்தான் மாட்டிகினு பிஞ்சு என் நெஞ்சு அதில் சூடை ஏத்துற... - ஏன்டா பாட்டு பாடுறேங்கிற பேர்ல இப்படி காண்டு ஏத்துற?

அட ஏன்டி காதல் கடலில் தள்ளுற.. - இவனை முதலில் கடலில் பிடிச்சுத் தள்ளுங்கய்யா!

என் பேரு பரமக்குடி நான் யாரு கண்டுபிடி... - நீ பாடி முடி. அப்புறம் இருக்கு!

என்ன சொல்ல... ஏது சொல்ல - அப்போ நீ பாட வரல!

தில்லு முல்லு பண்ணல கெத்து கித்து காட்டல - நீ இன்னுமா கிளம்பல!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick