செம ப்ரோ!

‘பி லைக் ப்ரோ’. சில நாட்களாக இணையத்தில் சக்கைப்போடு போட்டு வரும் முகநூல் பக்கம். இந்தப் பக்கத்தை ஒருமுறை லைக் செய்தால் போதும். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மீம் போட்டு உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பெரும்பாலான மீம்ஸ்களின் ஐடியா பழசுதான் என்றாலும்  மற்ற மீம் பக்கங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசமே, இந்தப் பக்கத்தில் போடப்படும் மீம்களில் உள்ள ‘ப்ரோ’ எனும் கதாபாத்திரம்தான். மொட்டைத் தலை, அடர்ந்த தாடி, சிவந்த கண்கள், கழுத்து நிறைய தங்க செயின்கள், வாயில் ஒரு சுருட்டு என எந்த நேரத்திலும் ஒரே ரியாக்‌ஷனை காட்டும் இந்த ‘ப்ரோ’ கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் ஏராளம்.

‘டு நாட் லைக் திஸ் பேஜ், யு வில் டை ஆஃப் லாஃபர்’ (இந்த பேஜை லைக் பண்ணாதீங்க, இல்லைனா சிரிச்சே செத்துடுவீங்க) என்ற முகநூல் பக்கம் ஏற்கெனவே செம பிரபலம், அதில் பல கதாபாத்திரங்களை வைத்து மீம்ஸ் போடுவார்கள். அவற்றில், ‘ப்ரோ’ கதாபாத்திரமும் ஒன்று. ‘ப்ரோ’வுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமானதாலேயே தனிப் பக்கம் ஆரம்பித்துவிட்டார்கள். நம் ஊரிலும் இதே கதாபாத்திரத்தை வைத்துப் புதிதாக ‘பக்கங்கள்’ உருவாக்கி மீம்ஸ் போட்டு அட்டகாசம் செய்து வருகிறார்கள். ‘ப்ரோ’ பார்ப்பதற்கு ஒரு சாயலில் ராமி ரெட்டி போன்று இருக்கும். இந்தப் பக்கத்தின் அட்மின் யார், இவிய்ங்க எந்த ஊர்க் காரய்ங்க? என்ற விபரமும் சரியாகத் தெரியவில்லை. வெட்டியாக இருந்தால் பக்கத்தை ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க. சாம்பிளுக்கு சில மீம்ஸ்கள் (தமிழில்)...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick