பாட்டாப் பாடுறீங்க?

மிழ் சினிமாவில் பாட்டு என்பதே லாஜிக் மீறிய விஷயம்தான். அதையே காரணமா வெச்சு இவிய்ங்க அடிக்கிற கூத்து இருக்கே...கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்குங்க ப்ரோ!

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில், ‘இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை’னு சிம்ரன் பாட அதை காம்பவுண்ட் சுவற்றில் தொங்கியபடி வேடிக்கை பார்த்து ரசிப்பார் விஜய். பாத்ரூம்ல ஒருத்தன் எட்டிப்பார்க்கிறானு திடீர்னு ஒரு பொண்ணு கத்த, சிம்ரன் பொறுக்கி ராஸ்கல்னு திட்ட, அண்ணா நான் இல்லீங்னானு விஜய் எஸ்ஸாவார். முறைப்படி முறைவாசல் வழியாப் போய் சிம்ரன் டான்ஸை என்ஜாய் பண்ணி ரசிக்க வேண்டியதுதானே. எதுக்கு சுவத்துல தொங்கணும், திட்டு வாங்கணும்!

‘ஜீன்ஸ்’ படத்தில், ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா’ பாடலில் ஒரே ஒரு பவர் கிளாஸை வெச்சு ஐஸ்வர்யா ராயை அக்கா, தங்கச்சினு ரீல் விடுறதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா செந்தில் க்ராஃபிக்ஸ் ரூமுக்குள் போய் ஒரு பட்டனைத் தொட்டதும் மொத்த சிஸ்டமும் கொலாப்ஸாகி ஐஸ்வர்யா ராய் உடம்பு குண்டாகிறதும், திரும்ப ஒல்லியாகிறதும், தலை மட்டும் தனியா சுத்துறதுனு வகை வகையா காட்டுவாங்க. அதை இப்போ பார்க்கும்போது கல்யாண வீடியோ கேசட் பார்த்த ஒரு ஃபீல் வருது!

‘காதல் ஓவியம்’ படத்துல ‘சங்கீத ஜாதி முல்லை’னு ஹீரோ கண்ணன் ஹைபிட்ச்ல உயிரைக் கொடுத்து பாடுவார். பாட்டின் தொடக்கத்துல நம்தம் த நம்தநம் தம்னு ஜதி சொல்வார். அதுக்கு ராதா கொலுசைத் தரையில் தட்டி ரிப்ளை கொடுப்பார். அவ்ளோ பெரிய கூட்டத்துல கண்ணனுக்கு மட்டும் கேட்கிற அந்தக் கொலுசு சவுண்டு ஏன் மத்தவங்களுக்கு கேட்கலை?

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் ‘மாமா நீ மாமா புத்தம்புது பாட்டு’னு கவுண்டர் பாட கார்த்திக் பக்கத்துல ஒளிஞ்சுக்கிட்டு அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பார். இதில் வேடிக்கை என்னன்னா, மணிவண்ணனுக்கும் ரம்பாவுக்கும் சவுண்ட் எந்தப் பக்கம் இருந்து வருதுன்னே தெரியாதாம். ஒரு ரூமுக்குள்ளவே இப்படி சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிக்கிறீங்களேய்யா!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்