கதை விடுறாங்க!

‘சலூன் கடையில் முடி வெட்டும்போது அசந்து தூங்கிப்போனான் கதிரவன். அப்போது யாரோ அவன் முதுகில் தட்ட, கண் விழித்துப் பார்த்த கதிரவன்...

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ராஜ்குமார்:
கண் விழித்துப் பார்த்த கதிரவன் அதிர்ச்சியானான். காரணம் அவன் மண்டையின் இருபுறமும் இரட்டை இலை சின்னமும், உதயசூரியன் சின்னமும் வெட்டப்பட்டிருந்து. கொதித்தெழுந்து கோபமாகிக் கேள்வி கேட்க நினைத்தவனின் வாயில் ‘அம்மா’ ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

சந்தோஷ்: கதிரவன் முன்னால் ராஜேஷ் லக்கானி நின்றுகொண்டு ‘கதிரவன் முடி வெட்ட எப்போதும் 100 சதவிகிதம் ரெடி... ஆனா ஓட்டுப் போட?’ எனக் கேட்டுத் தெறிக்கவிட்டார்.

மணிகண்டன்:
கதிரவன் திகைத்துப் போனான். ஏனெனில், முதுகில் தட்டியது வைகோ. ‘ஏன் தம்பி... நான் மேடையில் பேசும்போதுதான் தூங்குறாங்கனா, நான் பேசுறதை டி.வி-யில் கேட்டும் தூங்குறீங்களே’ எனக் கேட்டார்.

கோகுல்:
நமக்கு நாமே பயணத்தை முடிக்க ஸ்டாலின் கடைக்கு வந்து கதிரவனை எழுப்பி குறையைக் கேட்டு முடியட்டும் விடியட்டும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்