நல்லா வருவீங்க!

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஹீரோவின் அடையாளமே அநியாயத்தைக் கண்டு பொங்குவதும், ஒழுக்கசீலர்களாய் இருப்பதும்தான் என்று இருந்தது. இப்போ அது வேற ஏரியாவுக்குப் போயிடுச்சு. இனிமே தமிழ் சினிமா ஹீரோஸ் எப்படி இருப்பாங்கனு சும்மா ஒரு ட்ரெய்லர் விட்டுப் பார்ப்போமா?

ஹீரோ, குடிப்பழக்கத்துக்கு மட்டுமல்ல; கஞ்சா, கொக்கெயின், அபின், போதை ஊசி போன்ற பலவிதமான பழக்கங்கள் கொண்டவராக இருப்பார். ஒரு ஃப்ளோவில் ஈவ்டீஸிங், அதையும் தாண்டி கசமுசாவெல்லாம் பண்ணுவார். ஆனால், கருமம் பிடிச்ச காதல் வந்ததும் குட்டிநாயாய் நாயகி பின்னால் லோ லோவென நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவார்.

சண்டைக்காட்சிகளில் செம மொக்கை வாங்குவார். அடி வாங்கி இவர் ரத்தம் ஒழுக நிற்பதைப் பார்த்ததும்தான் நாயகிக்கு நாயகன் மீது லவ்வு பொங்கும்.

&%#** என்ற கெட்டவார்த்தையோடுதான் காதலையே சொல்வார். டாஸ்மாக் முன்னால் சிம்பு ஸ்டைலில் கழுவி ஊற்றித்தான் காதல் சோகத்தை ஆபாசமாகக் கொப்பளிப்பார்.

திருட்டே ஹீரோவின் தொழிலாக இருக்கும். களவாணிப்பயலுகள் மீதுதான் காதல் பூக்கும். ‘வாழ்க்கையில முன்னேறணும்னா...’ எனச் சொல்லி ஐந்து கட்டளைகள், 10 பாயின்ட்கள் சார்ட் பேப்பரில் எழுதி மொக்கையாய் திருடச்சொல்லி ரூட் போட்டுக் கொடுப்பார்கள். பேங்கை கொள்ளை அடிப்பது, நகைக்கடையை லவட்டுவது, காங்கோவுக்கு வைரம் கடத்தப்போவது என எல்லாமே வேற லெவல் திருட்டுகளாக இருக்கும். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் அதே வைப்ரேட் மோடில் நாம் குறைந்த பட்சம் செயினையாவது அறுக்கும் அளவுக்கு மாறி இருப்போம்.

ஹீரோயினிடம் அநியாயத்துக்கு மொக்கை வாங்குவார். க்ளைமாக்ஸில்தான் ஹீரோயின் லவ்வை ஏற்றுக்கொள்வார். அதுவரை இவர் பண்ணும் லவ் டார்ச்சர்ஸ் எல்லாமே ஈவ் டீஸிங்கில் தூக்குதண்டனையே கொடுக்கலாம் ரகங்களில் மிரட்டும். ஏன்யா ஏன்?

தண்ணி பாட்டிலை சட்டையில் கவிழ்த்ததைப்போல எப்போதும் சட்டை ஈரமாக இருக்கும் அளவுக்கு வியர்வையில் திரிவார்கள். இயற்கையான அழகாம். ஹீரோயின்கள் மட்டும் பளபள மேக்-அப்பில் டைட் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் உலா வருவார்கள். தட் சர்க்கரைப்பொங்கல், வடைகறி மொமென்ட்டேதான் பாஸ்.

ஹீரோக்களைவிட வில்லன்களுக்காக செம மெனக்கெடுவார்கள். மழுமழு ஷேவிங்கில் பிரசாந்துக்கு அண்ணன் போலவே இருக்கும் பாபி சிம்ஹாவைப் ‘பருத்தி வீரன்’ கார்த்திக்கு அண்ணன் போல தாடி லுக்கில் டெரர் கூட்டி மிரட்டுவார்கள். முரட்டு வில்லனுடன் முட்டி மோதி முட்டி பெயர்ந்தால்தான் அவன் ஹீரோ பாஸ்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick