ஏன் பாய்ஸ் ஏன்?

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என சோஷியல் மீடியாவில் அட்ராசிட்டி செய்யும் டியர் பாய்ஸ்... இதெல்லாம் நல்லாவா இருக்கு?

காலையில எழுந்து பல்லுகூட விளக்காம குட்மார்னிங்னு ஒற்றை வார்த்தையை போஸ்ட் போட்டோம்னா, அடுத்த நிமிஷமே லைக்ஸ் போட்டுத் திணற வைக்கிறீங்க ஓகே. ஆனா குட்மார்னிங்கைக்கூட டைப் பண்ண முடியாம அதை ஷேர் பண்றீங்களே, என்ன பாஸ் நியாயம்?

அதுதான் உங்க மெசேஜுக்கு ரிப்ளை பண்ணலைனு தெரியும்ல... ஆனாலும் இன்பாக்ஸ்ல சதா ’ஹாய்’ சொல்லி பல்பு வாங்குறீங்களே, இதெல்லாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய...

ராத்திரி பத்து மணிக்கு மேல போஸ்ட் போடுறது அவ்ளோ பெரிய குத்தமா கண்ணுங்களா? சொல்லி வெச்ச மாதிரி இன்பாக்ஸ்ல வந்து ‘இன்னுமா தூங்கலை’னு கியூவுல வந்து நூல் விடுறதெல்லாம் ஓவரோ ஓவர்!

ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தா அப்படி ஓரமா வரிசையில வரணும். அதை விட்டுட்டு க்ளோசப்ல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை இன்பாக்ஸ்ல அனுப்பி வெச்சு எங்க பீபியை ஏத்துறீங்களே...மீ பாவம் பாய்ஸ்!

ஃபேக் ஐ.டி பக்கிகளா...நாங்க எல்லாம் கேர்ள்ஸ் ரெக்வெஸ்ட் கொடுத்தாலே அதை அக்செப்ட் பண்ண பத்தாயிரம் தடவை யோசிப்போம். இதுல நீங்க வேறையா...பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

வகை வகையா வாட்ஸ் அப் குரூப் வெச்சு அதுல எங்களைக் கோர்த்துவிட்டு கும்மி அடிக்கிறீங்களே... ‘ஏ’ ஜோக் அடிக்கிறப்பவும் அந்த பலான வீடியோவைப் போடுறப்பவும் குரூப்ல நாங்க இருக்கிறதே தெரியாத மாதிரி சீன் போடுறீங்களே...உங்களால மட்டும் ஹவ் இஸ் பாசிபிள்?

நாங்க ஆசையா ஒரு செல்ஃபி எடுத்து டி.பி வெச்சா அது உங்களுக்குப் பொறுக்காதே. அப்படியே ராவோட ராவா டவுன்லோடு பண்ணி... ‘வாவ் வெர்ர்ரி நைஸ்’னு எங்களுக்கே திருப்பி அனுப்பி டெர்ரர் ஆக்குறீங்களே... நாங்க எப்பவாச்சும் உங்க டி.பியை ’நைஸ்’னு சொன்னோமா... இல்ல சொன்னோமான்னுதான் கேட்கிறேன்?

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல ‘ஆர் யூ ஓகே பேபி’னு வெச்சது ஒரு தப்பா? ஒன்பது தடவை ஹார்ட்டின் சிம்பளோட ’ஐ யம் ஓகே பேபி’னு பால்புட்டியைக் கவுத்துவிட்டா மாதிரி வழிஞ்சு விழறீங்களே... ஸ்டேட்டஸ் ஒன்னும் பொதுவுடமை இல்லை, புரிஞ்சுக்கோங்க!

ட்விட்டர்ல ஒரு உலக தத்துவம் போடுறோம்... உங்களுக்கு என்ன பிரச்னை? ’சொல்ல வந்துட்டாங்கடா செல்வ சீமாட்டி’னு ரீ ட்விட் செஞ்சு எங்களை காண்டாக்கிறவங்களுக்கு கருட புராணத்துல ஏதாச்சும் தண்டனை இருக்கானு பார்க்கிறேன் இருங்க.

அதெல்லாம் இருக்கட்டும் இந்த ஆர்டிகளைப் படிங்க, வேணாம்னு சொல்லலை... அதுக்குள்ள என் ஃபேஸ்புக் ஐடியைத் தேடுறீங்க...ஏன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்