இது காமெடி காக்கிச்சட்டை!

போலீஸ் படம்னா இப்படித்தான் இருக்கணும்னு யாரோ ஒருத்தர் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சுட்டார் போல. படத்துக்குப் படம் வெச்ச சீனையே வெச்சு வெறுப்பேத்துறாங்க மை லார்ட். நீங்களே பாருங்க...

ஹீரோ பெரும்பாலும் சப்-இன்ஸ்பெக்டராதான் இருப்பார். படத்தின் முதல் காட்சியிலேயே புல்லட்டில் வந்து பந்தாவாக இறங்குவார். இல்லை, புழுதிக் கிளம்ப காரைத் திருப்பி புகை மண்டலத்துக்குள் இருந்து வருவார். கையிலே காப்பு போட்டிருப்பார். முறுக்கியிருக்கும் மீசையையே மீண்டும் மீண்டும் முறுக்கி தயாரிப்பாளருக்கு ஒட்டு மீசை செலவையும் சேர்த்து எழுதுவார். மீசை கையோடு வந்திடப் போகுது பாஸ்...

பெரும்பாலான போலீஸ் ஹீரோக்களுக்கு அழகான குடும்பம் ஒன்று இருக்கும். ‘அவன் குடும்பத்தைத் தூக்குங்கடா... அவன் தானா வருவான்’ என எல்லா வில்லன்களும் அவர்களைத்தான் கடத்தி வந்து கயிற்றில் கட்டிப்போடுவார்கள். அதுவும் இடுப்புகிட்ட வெடிகுண்டு வேற வெச்சு விட்ருவாய்ங்க இந்த வில்லப் பயபுள்ளைக...

சில வில்லன்கள் ஹீரோவின் குடும்பத்தைக் கடத்தி காருக்கும், கயிறுக்கும் செலவு வைக்க விரும்ப மாட்டார்கள். வீட்டில் இருக்கும் சிலிண்டரைத் திறந்துவிட்டு கதையை முடித்துவிடுவார்கள். அந்தச் சமயம் காய்கறி வாங்கப் போன ஹீரோ மட்டும் உயிர் பிழைச்சுடுவார். இன்னும் சில வில்லன்கள் வெடிகுண்டை கூரியரில் அனுப்பி சிம்பிளாக சீன் வைப்பார்கள்.

ஹீரோ சகட்டு மேனிக்கு எல்லோரையும் என்கவுன்ட்டரில் போடுவார். விசாரணை கமிஷனிடமும் எடக்கு மடக்காய் எதிர்கேள்வி கேட்டு அவர்களைத் திக்குமுக்காட வைப்பார். மடியில் ஃபைலை வைத்துக்கொண்டு எகத்தாளமாய் உட்கார்ந்துதான் எதிர் கேள்வி கேட்பார். கேஷுவலா இருக்காராமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்