ஹலோ, லோன் தர்றீங்களா?

நாம் முக்கியமான போனுக்காக காத்திருக்கும் போதுதான், பேங்கிலிருந்து ‘லோன் வேனுமா’ என கால் செய்து கடுப்பேற்றுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் கண்டபடி திட்டாமல், இவற்றை முயற்சி செய்து பாருங்கள். பேங்கில் இருந்து ஜென்மத்துக்கு உங்களுக்கு போன் வராது. ‘ஹலோ ஸார் லோன் வாங்க ஆர்வமா இருக்கீங்களா?’ என அவர்கள் கேட்கும்போது...

ரொம்பவே ஆர்வமா இருக்கேன் பாஸ். இப்போ தான் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்தேன். செலவுக்கு என்ன பண்றதுனு யோசிச்சுட்டு இருந்தேன், கடவுளாப் பார்த்துதான் உங்களை கால் பண்ண வெச்சுருக்கார்.

ஆர்வம்லாம் இருக்கு பாஸ். நானும் ஒரு ஏழு, எட்டு பேங்கில் ஏறி இறங்கிப் பார்த்துட்டேன். ஆனா, யாருமே லோன் தரமாட்றாங்க. தயவு செய்து நீங்களாவது தாங்க...

கண்டிப்பா, அடுத்த வாரம் குடும்பத்தோடு வெளிநாடு போறேன். அங்கேயே செட்டில் ஆகப் போறோம். அதுக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுமா?

ஆர்வம்லாம் இருக்கு. ஆனா, ஒரே ஒரு டவுட்டு, லோன் வாங்குனா கண்டிப்பா திருப்பிக் கட்டணுமா?

அய்யோ, இப்பவே எங்க வரணும்னு சொல்லுங்க வரேன். என் கல்யாணத்தை ‘பாகுபலி’ செட்டை விட பிரமாண்டமான செட் அமைச்சு பண்ணலாம்னு இருக்கேன். அதனால், ஒரு பத்து கோடி மட்டும் தேவைப்படுது. முடியுமா?

கண்டிப்பா சார், ஈமு கோழி பிஸினஸ் பண்ணலாம்னு இருக்கேன். பார்த்து பண்ணிவிடுங்க...

இதேபோல் வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் போனை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவங்க பார்த்துக்குவாங்க... ‘தயிர்சாதம், ஜாங்கிரி, அப்பளம், பால்கோவா...’

இது எதுவுமே ஞாபகத்துக்கு வரலைனா ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க ‘ஆஹான்...’

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick