ஃபீலிங் பிலாஸபி!

ரிஸ்டாட்டில் அதைச் சொல்லியிருக்கிறார்... எபிக்யூரஸ் இதைச் சொல்லியிருக்கிறார்னு முன்ன பின்ன  தெரியாதவங்க சொன்னதையெல்லாம் கண்டபடி பாராட்டுறோமே. நம்ம நாட்டுக்குள்ளேயே பிரமாதமான  தத்துவஞானிகள் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? அவங்க என்னென்ன தத்துவங்களை சொல்லியிருக்காங்க தெரியுமா?

ஜெயிக்கும்வரை குதிரை வேகத்தில் ஓடு, ஜெயித்தபின் அதைவிட வேகமாக ஓடு. # ரன்னிங்துவம்!

பாய்சன் 10 நாள் ஆனாலும்  பாயசமா மாறாது, ஆனா பாயசம் மூணு நாள் ஆனாலே பாய்சனா மாறிடும். #வெசத்துவம்!

சட்டை ஃபர்ஸ்ட் பட்டனைத் தப்பா போட்டா மீதி இருக்கிற எல்லா பட்டனும் தப்பாவே வரும். #டெய்லரின் எக்ஸ்பீரியன்ஸ்துவம்!

கண்ணை மூடிப்படுத்தா, தூக்கம். திரும்ப எந்திரிக்கலைனா துக்கம். # சங்குத்துவம்.

கருப்பா இருக்கிற பையனுக்கு அட்லீஸ்ட் மேரி பிஸ்கட் கலர்லேயாவது பொண்ணு தேடுறவங்கதான் உண்மையான அம்மா. #அம்மாவின் அலையன்ஸ்துவம்!

காதல் கருவாடு மாதிரி. ஊரே நாறினாலும் நமக்கு ருசியாதான் இருக்கும். # கப்புத்துவம், கருவாட்டுத்துவம்.

டச்சில் இல்லாத ஃப்ரெண்ட்ஷிப்பை டச்சில் கொண்டு வந்தது மொபைல். # டச்சுத்துவம் ப்ளஸ் டார்ச்சர்துவம்!

வைஃப், அம்மா சண்டையில் யாருக்கும் சப்போர்ட் பண்ணாம அமைதி காப்பவனே சிறந்த குடும்பஸ்தன். # ஃபேமிலி மெயின்டெனன்ஸ்துவம்!

பொறுமை இல்லாத மனிதன் எருமை மேய்ப்பான்.  #பஃபெல்லோத்துவம்!

கிடைச்ச சரக்கை குடிக்கிறவனை விட பிடிச்ச சரக்கை குடிக்கிறவன்தான் புத்திசாலி. # ஹேங்க் ஓவர்த்துவம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick